Sunday, December 21, 2014

Hanumath Jayanthy - 2014

ஹரி நாமமும் ஹர நாமமும் சேர்ந்ததே ராம நாமம். ஹரியின் அவதாரமான ராமனுக்கு உறுதுணையாக இருக்க ஹரனின் அம்சமாக ஹனுமான் அவதரித்தார். பராசர பட்டர் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஸ்ரீராம சரித்ரத்தைச் சொல்லும் நாமங்கள் வருமிடத்தில் தன் வ்யாக்யானத்தில் “அத ம்ருதஸஞ்ஜீவநம் ஸ்ரீராம சரிதம் ப்ரஸ்த்தூயதே” என்றார். இனி மரித்தவர்களையும் பிழைக்கச் செய்யும் ஸஞ்ஜீவினி மருந்து ராமநாமம் என்கிறார். த்யாகராஜர் தனது க்ருதிகள் மூலமாக கோடி ராமநாமங்களைச் சொன்ன பேறு பெற்றார். ராமனைக் காணவேண்டுமென்றால் அனுமனை பஜிப்போம். அனுமனை வரவழைத்தால் ராமர் அங்கு ப்ரஸன்னமாகுவார். இதனை துளஸிதாஸர் மூலம் அறிவோம்.
இன்று ஹனுமத் ஜயந்தி. ராமஜபம் செய்து ஹனுமனை இங்கு வரவழைபோம். இ ங் கு ராமனும் ப்ரஸன்னமாவார். நாராயணீயத்தில் இரண்டு ஸர்கங்கள் மூலம் இருபது ஸ்லோகளால் ராமாயணம் என்ற ரமணீயமான மாலையை நாராயண பட்டத்ரி அருளியதை எனது தந்தையார் “ராகஸ்ரீ” அருமையாக தமிழில் தொடுத்து ரஞ்சகமான ராகங்களின் கலவைகளினால் அதற்கு அழகு ஊட்டியுள்ளார். அதனைப் பாடி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் 7 அக்டோபர் 2014ல் நடந்த பவித்ர உத்ஸவத்தில் இரண்டாம் நாள் அன்று மாலையில் நடைப்பெற்ற ஹோமத்தின் போது பூர்ணாகுதியின் பொழுது ப்ரதான அக்னி குண்டத்தில் ஹனுமான் ப்ரத்யக்ஷமாக அருள்பாலித்த அற்புதக் காட்சியினை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment