Sunday, December 24, 2017

Musical Trapeze - Corporate Music or Carnatic Music ?

நானும் என் நண்பரும் ஒரு முன்னணிப் பாடகரின் கச்சேரிக்குச் சென்றிருந்தோம்
நான் பாடுவேன். நாம சங்கீர்த்தனம் செய்யும் எனக்கு கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பாண்டித்யம் கிடையாது. கேள்வி ஞானத்தில் ராக சாயயை வைத்துக் கொண்டு இந்த ராகம் என்று ஒரு ஹேஷ்யத்தில் சொல்லுபவன் நான்
என்னுடன் வந்தவர் முன்னணிப் பாடகர்களிடம் சிக்ஷை பெற்றவர். ராகம், கற்பனை ஸ்வரம் கையாள்வது, கணக்கு வழக்கில் கைதேர்ந்தவர். முன்னணிப் பாடகர் கத்தனு வாரிகி என்ற தோடி ராக கீர்த்தனையை ஆரம்பித்தார்.
தோடி ராகத்தில் அருமையான கோர்வையுடன் ராக ஆலாபனை. COPY BOOK STYLE என்பார்கள். அந்த பாணியில் இந்த சங்கதிக்குப் பிறகு இந்த சங்கதிதான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிட்டையான சங்கீதம். ஒரு ஆயிரம் தடவை கௌளி கொட்டுவது போல்சோ ச் சாஎன்ற சக ரசிகர்களின் ஒரு பாராட்டு. அவர் ஆலாபனை முடிப்பதற்காக மந்த்ர ஸ்தாயி போய் முடிக்கலாம் என்று நினைப்பதற்குள் ஒரு கை தட்டல். ஹாரிமோனியத்தில் Reeds உள்ளது போல் குரல். மூன்று Octaveலும் சஞ்சாரம். மேல் ஸ்தாயில் ஒரு தெய்வீகப் பெண் குரல். கீழ் ஸ்தாயில் கொஞ்சம் புளிச்ச மோர் சாப்பிட்ட வடு. நடு ஸ்தாயியில் அங்கங்கே ஸ்ருதியுடன் சேர்ந்த ஒரு ப்ரமிப்பு. ஒரு வழியாக ஆலாபனை அரிசிப்பானைக்குள் சென்றது. வில்லின் வல்லர் வயலின் வித்வான், தன்னை “Yahudi Menuhin” அளவிற்கு தன்னை நிறுத்திக் கொண்டு, சுவற்றில் பேளாடால் கீறினால் ஏற்படும் ஒரு புளகாங்கித்தை தனது வில்லினால் ஏற்படுத்தி ஒரு அருமையான “Applause” கேட்டு வாங்கிக் கொண்டார். அரங்கம் அதிர்ந்தது. பாவம் ம்ருதங்கம் அரங்கத்தின் குளிரில் நடுங்கி மப்ளர் போர்த்திக் கொண்டிருந்தது. ம்ருதங்க வித்வான் ம்ருதங்கத்தை குழவிக் கல்லால் சிறிது தாஜா பண்ணி வாசிக்க ஆரம்பித்தார். Circus Trapeze தொடங்கிற்று.
பாவம் த்யாகராஜர் க்ருதி.
பாடகர், வயலின் வித்வான், ம்ருதங்க வித்வான், கடம் மற்றும் முகர்சிங் என்று பலதரப்பட்ட வித்வான்களிடம் வேகம், நளினத்தாலும் கீழே விழாமல் பல கைதட்டல்களுடன் மிகவும் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. அரை இடம் முக்கால் இடத்தில்ஸ்வரப் ப்ரஸ்தாரத்தைஅமர்க்களமாக கைமாற்றி அரங்கத்தை அதிரச் செய்தார். பிறகு வித்வான் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு ரசித்து ருசித்து ஏதோ ஒரு த்ரவத்தை சுவைத்தபடி மற்றொறு கையால் குத்து மதிப்பாக ஒரு தாளம். ம்ருதங்கம், கடம், முகர்சிங்க் இவர்களிடம் மேலும் உள்ள சுழற்சிகளை விட்டு விட்டார். மூவரும் பிய்த்து விட்டார்கள். அரங்கம் கைதட்டலில் அசந்து விட்டது. உடன் வந்தவர்சார் கச்சேரி எப்படி? என்று வினவினார். முன்னணிப் பாடகர், என்னுடன் வந்தவரின் favourite musician.
என் நண்பர் சொன்னார்ஒரே ப்ருகா சார்”, எப்படி?” என்றார்.
என்னுள் வெளியில் சொல்லமுடியாத ஒரு கணிப்பு.
ஸ்ருதி அங்கங்கே சேர்ந்தது. தாளம் ஒன்று இரண்டு அக்ஷரம் தவறினால் ம்ருதங்கக்காரர் கவனித்துக் கொள்ளமாட்டாரா என்ன? என்பது தான் அந்த கணிப்பு.  
பாவம் த்யாகராஜர், என்ன நினைத்துப் பாடினாரோ, அந்த Bhavam, அர்த்தம் கச்சேரியில் பாவமாக அமர்ந்தது.  வீட்டிற்கு வந்து பாடலின் அர்த்தம் என்ன என்று சிறிதே பார்த்தேன். என் மனதில் உள்ள இருக்கமான உணர்விற்கு மாற்றாக இருக்கும் என்று அங்கு சென்றால் ஒரு அருமையான ஒரு Circus Trapeze Show வைப் பார்த்த ஒரு அனுபவம் தான் கிடைத்தது.
எனது இல்லத்திற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் வாழ்க்கையில் பல ப்ரச்சனைகள். அவரது ப்ரச்சனைகளைப் பார்க்கையில், கடவுளுக்கு பல Thanks சொன்னேன். “தெய்வம்" என்று வாஸ்தவமாகவே ஒன்று இருக்கறதா? என்று என்னை, அந்தரங்கமாக, அந்த ஆஸ்திக நண்பர் வினவினார். வாழ்வில் பல துன்பங்களைக் கண்டவர். அந்த துன்பங்கள் மேலும் அவருக்கு தொடர்கின்றது. கடவுள் நம்பிக்கையில் திளைத்து ஏமாந்தவர். ஏமாற்றமும் கோபமும் அடைந்த அவர்பக்தி பக்தி என்று பிறர்க்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே உம்முடைய பக்தி எங்குள்ளது என்றார். “வாஸ்தவம், தெய்வத்தை நான் கண்டிருந்தால் உம்மிடம் ஏன் இப்படிப் பேச வருவேன் என்றேன். அவரோ சமாதானம் அடையாமல் சென்றார். கத்தனுவாரி விஷயத்துக்கு வருவோம்.
---------------------------------------------------------------------------------------------------------------
பல்லவி
கத்3(3)னு வாரிகி கத்3து3 கத்3(3)னி மொரல(னி)டு3
பெத்33ல மாடலு நே(ட3)3த்34(மௌ)னோ
அனுபல்லவி 
அத்33ம்பு செக்கிள்ளசே முத்3து3 காரு மோமு ஜூட3
பு3த்3தி4 கலிகி3(ன)ட்டி மா வத்33 ரா(வ)தே3மிரா (க)
சரணம்
 நித்3து3ர நிராகரிஞ்சி முத்3து33 தம்பு3ர பட்டி
ஸு1த்34மைன மனஸுசே ஸு-ஸ்வரமுதோ
பத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு ப4க்த பாலனமு ஸேயு
தத்3-3ய-ஸா1லிவி நீவு த்யாக3ராஜ ஸன்னுத (க)
--------------------------------------------------------------------------------------------------------------------
உண்டு என்று சொல்பவர்களுக்கு உண்டு. உண்டு என்றால் ஏன் எளிதில் கண்ணில் படுவதில்லை. நான் பார்க்க விரும்புவது அந்த தெய்வத்தின் அழகிய தோற்றத்தை. கண்ணாடி போல் மின்னும் கன்னங்களுடன் ஒளிமிகுந்த அவன் முகத்தைக் காண, புத்தி கொண்டு எங்கும் எங்கள் முன் வராமல் இருப்பானேன். ஸர்வேஸ்வரனின் அகண்ட ஸச்சிதானந்த அதிசயத்தைக் காண இயலாதவனாயினும் ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களில் அவன் ஏற்ற ஸுகுணாகர சுக ஸ்வரூப தர்சனமாவது எனக்குக் கிடைக்காதா?
தூக்கத்தை விட்டு, நன்றாகத் தம்புராவை ஸ்ருதி சேர்த்து அமைத்து சுத்தாமான மனதுடன் ஸுஸ்வரமாக
ஸம்ப்ரதாயப்படி பஜனை செய்தால், 
அவ்வாறு தன்னை பஜிப்பவரை பாதுகாக்கும் மகா தயவுள்ள மூர்த்தி, நிச்சயம் தரிசனம் அளிப்பார் என்பது பெரியோர்களின் வாக்கன்றோ.
த்யாகராஜனால் இந்த அனுபவம், கண்டு கொண்டாடப்படும் இந்த ராமபிரான், நிச்சயம்உள்ளான்என்பவர்க்கு உள்ளான்.

த்யாகராஜன் உண்டு என்பவருக்கு ஸ்ரீராமபிரான் உண்டு. பக்தியும் உண்டு. நல்ல சங்கீதமும் உண்டு
ஏனைய மற்றவர்களுக்கு………   ? உங்கள் கணிப்பிற்கு விட்டுவிடுகிறேன்.
இக்கால கட்டத்தில் நாம் கேட்கும் கர்நாடக சங்கீதம், ஒரு தெய்வீக அம்சம் இருப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது !
ப்ரமையா ? உண்மையா


No comments:

Post a Comment