Tuesday, December 5, 2017

Trijata's Dreams and Seetha's Anguish

த்ரிஜடையின் சொப்பனம்
பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும் - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். 
விபீஷணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன், அன்னை கேகசியின் அறிவுரைப்படி, இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.
சீதையை சிறை வைத்தபோது, த்ரிஜடை பாதுகாவலராக நியமிக்கப்பட்டாள். ராவணனின் துர்போதையினால் அரக்கிகள் சீதையை துன்புறுத்தியதால் கோபமுற்ற த்ரிஜடை தனது கனவினைப் பற்றி விவரமாக மற்ற அரக்கிகளுக்கு உரைக்கிறாள். அதன் தமிழாக்கம் பின்வருமாறு. ராமாயணத்தில் த்ரிஜடை ஒரு முக்கியமான கதா நாயகர்.

  
சீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள்இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்!
நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)
எப்படிப்பட்ட அபாரமான கற்பனை! 
-------  (Courtesy swamiindology..blogspot) 
कीटोऽयं भ्रमरी भवेदविरतध्यानात्तथा चेदहं
रामः स्यां , त्रिजटे , तथा ह्यनुचितं दाम्पत्यसौख्यच्युतः |
एवं चेत्कृतकृत्यतैव भविता ; रामस्तव ध्यानतः

सीता ; त्वं च निहत्य राक्षसपतिं सीतान्तिकं यास्यसि ||
----------------------------------------------------------------------------------
LEAP, was presented in English, as 'Ram-Lila', an improvised folk version of the ancient theatrical tradition of enacting the great epic in front of tens of thousands of devotees for extended period of time - as practiced & presented in India for nearly four centuries; this version includes dramatized adaptations of Saint Valmiki's Ramayana and Saint Tulsidas' Ram-Carit-Manas. This special production incorporated dance (Bharata nAtyam and other) forms as part of the episodic story line. Original music score is based on verses sung in operatic style by a live orchestra from Valmiki Ramayana and Tulsidas' Ram Carit Manas. The original score draws from both Karnatic and Hindusthani music traditions. This unusual operatic production features a distinctive, separate track that maps some of the events in the epic to psycho-spiritual constructs within each of us. This form of play was conceived, and scripted by Dr. KG Parameswaran who has also directed the opera. Apart from writing some special songs and composing music in scores of Indian Ragas, Priya Krishnan Parameswaran has directed the Music and is the lead vocalist. Subhapriya Krishnan Srivatsan has co-directed the Music and managed the Production. Lavanya Raman has acted, contributed to production design and also sang along with Karthik Gopalaratnam, another well known singer. The eighteen member cast included some well known professional actors from the United states and the nine member team of musicians included some of the well known professional artists from the Bay area.
This short clip is from a scene that portrays the agony, angst and dreams of TrijaTa, the noble daughter of the noble prince VibhIshaNa and the concerns of Sita in captivity. TrijaTa is portrayed by the 12-year old actor/singer Kaanchana Parameswaran and Sita was portrayed by Chinmayi Bettadapur, a well known dancer and a coporate executive from the SF bay area.

No comments:

Post a Comment