Monday, December 27, 2010

கம்பன் அறிந்த நரசிங்கத்திற்கு ப்ரஹ்மானந்தரின் பாமாலை

நாம் எல்லோரும் அறிந்தது பகவான் நாராயணர் சிங்கமும் மனிதனும் கலந்த உருவமுடன் ஹிரணியனை வதம் செய்தது.

ஏன் சிங்க உருவத்தை தேர்ந்தெடுத்தார்? நம்மில் எழும் கேள்வி! அதற்கு கம்பன் தனது பாக்களிலே கூறுகிறார்.
ஹிரணியன் ப்ரஹ்லாதனிடம் கர்ஜிக்கிறான் எங்கே உனது ஹரி? அப்பொழுதும் ஹரி எந்த விலங்கினத்தின் பாதி உருவத்தினை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கவில்லை.
மேலும் ஹிரணியன் சொல்லுகிறான் உனது ஹரி வராவிட்டால், யானை போன்ற உன் மத்தகமான உனது தலையை உடைத்து உனது உடலில் ஓடும குருதியினை குடிப்பேன். ஒரு தந்தை தனது தனயனைப் பார்த்து பேசும் வார்த்தையா இது! உடனே வெகுண்டு எழுந்தார் ஹரி, நரசிங்கமாக.

No comments:

Post a Comment