Thursday, February 3, 2011

Soma Sooktha Pradhakshinam

ஜய கைலாசபதே சிவ சங்கர 
சாம்ப ஸதாசிவ சம்போ 
பர்தீஸ்வர ஸாயீசிவ சம்போ 
சுக்லபக்ஷ அல்லது க்ருஷ்ணபக்ஷ த்ரயோதஸி மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உள்ள நேரத்தை ப்ரதோஷம் என்று கூறுவார்கள். அந்நேரத்தில் சிவஸ்தலங்களில் நந்திக்கு முக்கியத்துவம் அளித்து சிவனை வழிபடுவர். 
அதே போல் வைணவஸ்தலங்களில் நரசிம்ஹருக்கு முக்கியத்துவம் அளித்து விஷ்ணுவை வழிபடுவர். ப்ரதோஷ காலத்தில் சில சிவஸ்தலங்களில் சோமஸுக்த பிரதக்ஷிணம் செய்கின்றனர். மருந்தீஸ்வரர் ஆலயத்தில் இந்தமுறை வழிபாடு உள்ளது. அதனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு மின் வலையில் தேடிய போது நான் அறிந்த சில செய்திகள் பின்வருமாறு.
முதலில் ரிஷப தேவரை வணங்கி பிரதக்ஷிணமாக சண்டிகேஸ்வரர் வரை சென்று கோமுகியை கடக்காமல் அப்ரதக்ஷிணமாக மறுபடியும் ரிஷபதேவர் வரை வந்து வணங்கவேண்டும். இது போல் மும்முறை செய்வது ஒரு ஆவர்த்தியாகக் கொள்வர். அவரவர்கள் வேண்டுதல்படி மூன்று அல்லது நான்கு ஆவர்த்திகள் இந்த வகையான சோமஸுக்த பிரதக்ஷிணம் செய்வர். மேலும் ஆலால சுந்தரர், காப்பு அரிசி நைவேத்யம் போன்ற பல புதிய ப்ரதோஷத்தை ஒட்டிய செய்திகளை நான் அறிந்தேன். இதனைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் இந்த பிளாக்கில் பிறர் அறிய ஏதுவாக அளிக்கலாம்.

No comments:

Post a Comment