பக்கவாத்யமா அல்லது பக்காவாத்யமா
சங்கீதப்ரியா என்ற வலைத்தளத்தில்
பக்கவாத்திய வித்வான்கள் சிலர் எவ்வாறு வாய்பாட்டு வித்வான்களை, கச்சேரியில்
நன்றாக பாடவிடாமல் படுத்தினார்கள், பாட விடாமல் திணரஅடித்தார்கள் என்ற ஒரு விவாதம்
நடந்து கொண்டிருக்கிறது. சில ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளைப் படுத்துவதால், எல்லா
ஆட்டோ ஓட்டுனர்களும் சரியில்லை என்று சொல்லமுடியாது. மேலே சொன்ன விவாதத்திற்கு
மாறாக, இன்றய காலகட்டத்தில் பல வித்வான்கள் விதூஷிகள் பக்கவாத்ய வித்வான்களை
சரியாகப் போஷிப்பதில்லை. பக்கவாத்ய வித்வான்கள்
சரியான ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் இவர்களது சிறப்பான சங்கீதப் பயணம் ஓகோ என்று
இருக்குமா, என்று சிறிதே சிந்திக்க வேண்டும்.
பாகவத சிரோன்மணி / பாகவதரத்தினம்
என்று புகழப்படும் திரு.நாகப்பட்டினம் கோபால பாகவதரின் மைந்தன் திரு. முரளி க்ருஷ்ணன்
ஒரு சிறந்த ம்ருதங்கவித்வான். 1980 முதல் தப்லா வாசிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
திரு.பித்துக்குளி முருகதாஸ், திருமதி ஸூலமங்கலம் சகோதரிகள், ஸ்வாமி ஹரிதாஸ் கிரி
அவர்கள், என்ற பல முன்னணி வித்வான்களுக்கு தபேலா வாசித்த இவர், இப்பொழுதும் தனது
தபேலா பயணத்தை பல நாடுகள் சென்றும், வாசித்தும் முன்னணியில் இருந்து கொண்டு சிறப்பாக
நடைபோட்டு வருகிறார். உதாரணத்திற்கு ஒரு சிறிய தொகுப்பினை இங்கே காணலாம்.
No comments:
Post a Comment