தக்ஷிணத்தில் நாம ஸித்தாந்தம், நாம
ப்ரசாரம் செய்து குருஸ்தானம் வகிப்பவர்களான ஸ்ரீபோதேந்த்ராள், ஸ்ரீதர வேங்கடேஸ
அய்யாவாள், ஸ்ரீவேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் மூவரும், பின்னர் ஸ்ரீத்யாக
ப்ரம்ம்மும் போல், புதுக்கோட்டை ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் தஞ்சை ஜில்லாவில்
அவதரித்து நாமப் ப்ரசாரத்தை வளர்த்து, இன்று உலகளவும் நாம சங்கீர்த்தனத்தின்
முக்கியத்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.
தமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லா,
அரந்தாங்கி தாலுக்கா, வல்லவாரி க்ராமத்தில், ஆந்திர உத்தவ குலத்தில், முலகநாடு
பிரிவில், நந்தன வருடத்தில் புரட்டாசி மாதத்தில் 30ம் தேதி (14-10-1892)
வெள்ளிக்கிழமை, க்ருஷ்ணபக்ஷ நவமி, ஆயில்ய நக்ஷத்திரத்தில், ஸ்ரீஸுந்தரேஸய்யா
மீனாக்ஷி தம்பதிகளுக்கு அவதரித்த புதல்வன் வெங்கிட கோபாலக்ருஷ்ணன்,
நாமஸங்கீர்த்தனத்தில் ஒரு மைல் கல்லாக இருந்து “புதுக்கோட்டை ஸ்ரீகோபாலக்ருஷ்ண
பாகவதர்” என்ற
நாமத்துடன் உலகளாவிய புகழ் அடைந்துள்ளார். அவர் தொகுத்த பஜனை ஸம்ப்ரதாயத்தை “ஸ்ரீபஜனாம்ருதமாக” ஸிவராம க்ருஷ்ண சர்மா புத்தகவடிவில் கொண்டுவந்தார்.
தென் திருப்பேரை ராமக்ருஷ்ண ஐய்யங்கார்
அவர்கள் தொகுத்த பஜனோத்ஸவ மஞ்ஜரியை மின்வலைக்குத் தகுந்தமாதிரியான புத்தகவடிவில் ஸ்கேன்
செய்துள்ளேன். இதனைப் பெற விருப்பமுள்ளவர்கள் gavats@gmail.com என்ற
முகவரிக்கு மின்அஞ்சல் அனுப்பிப் பெறலாம். மாதிரிக்கு தோடய மங்களத்தின் தொகுப்பினை
கொடுத்துள்ளேன்.
No comments:
Post a Comment