இன்று சனிப் ப்ரதோஷ நாள். சிவனை வழிபடுபவர் சிவபெருமானை முன்னிருத்தி ப்ரதோஷ மஹிமையைச் சொல்லுவர். வைணவத்தைப் பின் பற்றுபவர் நரசிம்ம மூர்த்தியின் ப்ரதோஷ கால மஹிமையைச் சொல்லி வழிபாடு செயவர். ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதற்கு மற்றுமொறு சம்பவம் கபீர் காலத்தில் அரங்கேறியது.
காசி விஸ்வநாதன் அருளும் காசியம்பதியில், கபீருக்கு ஒரு நெருக்கடியான நேரம். ஹிந்து முகமதிய குருமார்கள் ஒன்று சேர்ந்து, தில்லி ஸுல்தான் லோடி முன் கபீரின் ராம் ரஹீம் நாம உச்சாரண முரண்பாட்டை பற்றி முறையீடு செய்தனர். மதவெறியர்கள் மதம் பிடித்த யானையை விட்டு கபீரைக் சொல்லப் பார்த்தனர். மதமான யானை மதச் சண்டைக்கு அப்பாற்பட்டது. முன்னே சென்ற யானை, கபீருடன் ஒரு சிம்மம் இருப்பதைப் பார்த்து மிறண்டு பின் சென்றது. யானைப்பாகனும் அதனைக் கண்ணுற்று கபீரின் மஹத்துவத்தை அறிந்தான். தெய்வத்தை நம்பியவர் ஹிந்துவோ அல்லது முகமதியரோ, அவர்கள் கண்களில் மட்டும்அது தெரிந்தது. அரசனும் சற்றே துணுக்குற்றான்.
ஹரியும் ஹரனும் ஒன்று சேர்ந்து, எல்லா தெய்வமும் ஒன்றே என்று தெளியவைக்கப்பட்டது. வளர்ப்பால் இஸ்லாமையும், குருவால் ராமனையும் ரஹீமையும் இருகண்களாகப் பாவித்து நாம ஸங்கீர்த்தனத்துக்கு விதை வித்திட்ட கபீர், ராமநாம பாயசத்தையும் க்ருஷ்ணநாம சர்க்கரையும் சேர்த்து நமக்குப் பல பாடல்களாக அளித்துள்ளார். அவைகளில் ஒன்று.
No comments:
Post a Comment