முல்லைப் பண் என்ற பழமையான ஒர் பண் கி.மு.3ம்
நூற்றாண்டிலிருந்தே பாடப் பட்ட பண். இந்தப் பண்ணினை கர்நாடக இசையில் ஹரிகாம்போதி
என்று 28வது மேளகர்த்தா ராகமாக இதனை வரிசைப் படுத்தியுள்ளனர். கமாஸ் தாட் என்று
ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தினை வகைப்படுத்துவர். முத்துஸ்வாமி தீக்ஷிதர்
பள்ளியில் இந்த ராகத்தினை ஹரிகேதாரகௌளம் என்பர். கர்நாடக சங்கீத மேதை பாரத் ரத்னா
திருமதி MSS அவர்கள் பாடிய பாடல் எல்லோராலும் ரசிக்கப் பட்ட பாடல் "ராமனன்னு ப்ரோவரா".
சங்கீதம் எங்கே யாரிடம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வாறு பலரும் அறிய
இசைக்கும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல இந்த கணினி யுகத்தில் மட்டுமே அது
ஸாத்யம். ரம்யமான கிணீர் என்ற குரலில், ஆரவாரம் இல்லாத
ஒரு இசைத்தொகுப்பினை இங்கு கேட்கலாம்.
இந்தத் திரைப்பட
பாடலும் ஹரிகாம்போதியோ?
No comments:
Post a Comment