Thursday, September 9, 2010

இன்றைய கால / கடினமான கட்டம்

இன்றைய கால கட்டம் / காதல் கட்டம் என்ற தலைப்பில் நான் படித்த ஒரு கட்டுரையின் சாரம்.
மிகவும் நயம்பட கூறியுள்ளார்கள்.
மூன்று வயது குழந்தையை விரல் பிடித்து அழைத்துச் செல்லலாம்.
அதை ஆறு-ஏழு வயதில் செய்தால் ஊனக் குழந்தை என்பர்.
ஐந்து வயது வரை உணவு ஊட்டலாம்.
அதை பத்து வயதில் செய்தால் குறைபாடு உள்ளது என்பர்.
இருபது வயது வரை பெற்றோர்கள் படிக்கவைப்பர்.
பின்பு அந்த மாணவன் தனது சொந்த முயற்சியில் படிக்கவேண்டும். இல்லையேல் அவனை கையால் ஆகாதவன் என்பர்.
பருவ வயதில் உள்ள மகன்/மகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்யாவிடில் அவர்களே தனது துணையை தேடிக் கொள்வர்.
பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் இருக்கும் உரிமை போகிறது. 
அவர்கள் காதல் கல்யாணத்திற்கு உந்தப்படுகிறார்கள். புராணத்தில் ராதா கல்யாணம், ஆண்டாள் கல்யாணம், ருக்மணி கல்யாணம், வள்ளி கல்யாணம் என்று மேற்கோள் காட்டி மிகவும் பேசப்படுவதாகச் சொல்லி, அதே சமயம் சத்யபாமா அல்லது தெய்வானை கல்யாணங்களை முக்கியமாக சொல்வதில்லை என்று மேற்கோள் காட்டுவர்.
அதுவே அந்தக் கல்யாணம் முறிந்தால் மேல் சொன்ன காதல் கல்யாணங்களை மேற்கோள் காட்டுவதில்லை. இத்தகைய திருமணங்களில் மனப் பொருத்தம் இருந்தும் சிறு சிறு விஷயங்களில் உள்ள கருத்து வேறுபாடு விவாகரத்தில் கொண்டுவிடுகிறது.  
பெற்றோர்கள் பல கோணங்களில் பார்த்துச் செய்கின்ற திருமணங்களும் விவாகரத்து வரை செல்கின்றன. இங்கும் மனப் பொருத்தம் இல்லாமையே முக்கிய காரணமாக அமைகிறது.
அறுபது சதவிகித பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு தக்க வயதில் துணை தேட இயலவில்லை. தகுதியான வரனையும் தேட முடியவில்லை. இதற்கு சான்று இன்றைய திருமண விளம்பரங்கள்.
ஆங்கிலத்தில் சொல்வது போல் “Date / Time Bar” ஆவதற்குள் விவாகத்தினை செய்யவில்லை என்றால் பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் இருக்கும் உரிமை போகிறது. இதுவே இன்றைய கால கட்டம்.

No comments:

Post a Comment