Monday, September 27, 2010

ஹரியும் ஹரனும் இவர்க்கும் ஒன்றே ! !


ஸ்ரீகாமகோடி பீடஸ்திதே கருணா கடாக்ஷி
எகாம்ரபதி ஹ்ருதய நிலயே நமாமி ஸ்ரீகாமாக்ஷி
என்ற சாவேரி கீர்த்தனையை திருமதி MSS அவர்கள் பாடியது தேனாய் காதில் பாய்ந்து அது நமது உடல் முழுவதும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இந்தக் க்ருதியினை ஸ்வரத்துடன் நமக்கு அளித்தவர் மைஸுர் ஸதாசிவ ராவ் அவர்கள். அவர் தனது க்ருதிகள் மூலம் பல தெய்வங்களை அழைத்து நம் முன் கொண்டுவருகிறார் இன்றும்; என்றும். த்யாகராஜ ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர் வெங்கடரமண பாகவதர்.
அவரது சிஷ்யர்களில் ஒருவரான இவர் மைஸுர் மகாராஜாவின் சமஸ்தானத்தை அலங்கரித்ததால் இவர் பெயருடன் மைஸுர் சேர்ந்தது. இவரது ஜனனம் சித்தூரை அடுத்த கிரம்பேட் என்ற ஒரு சிற்றூரில். த்யாகராஜ ஸ்வாமியின் முன் கானமழை பொழிந்து அவரது ஆசி பெற்றவர்.
“ஸாம்ராஜ்ய தயகேஷா என்ற காம்போஜி கிருதியை வீணை சேஷண்ணா, ஸுப்பண்ணாவுக்கு விஸ்தாரமாக அனுபவித்து பாடி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய ஸர்ப்பம அவரது கை வழியாக மேல் ஏறி அவரது தோளில் அமர்ந்து பாட்டிற்கு படம் எடுத்ததைப் பார்த்து இரு சிஷ்யர்களும் பயந்து வெளியே ஓடினார்கள். அந்த ஸர்பம சில நிமிடங்களில் மறைந்து விட்டதை பார்த்த அந்த இருவரும் கஞ்சி ஏகாம்ரேஸரது பரிபூர்ண ஆசி தனது குருநாதருக்கு இருப்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். அவரது நரசிம்ஹரைப் பற்றிய க்ருதியைப் பாடினால், நரசிம்ஹரே துணைப் பிளந்து நம் முன் வருவது போன்ற ஓரு உணர்வைக் கொடுக்கிறது.
மைஸுர் ஸதாசிவராவ் நமது மனதில் எப்பொழுதும் ஹரியயும் ஹரனையும் அவரது க்ருதிகள் மூலம் நிறுத்திவைக்கிறார்.

1 comment:

  1. God is Omnipresent.Faiths show away to reach HIM.God ultimately ,is our destination.In mundane life we seek HIM for help. WE can reach him by sincere efforts.

    ReplyDelete