Saturday, September 18, 2010

அடேடே விளம்பரங்கள்


ஆஹா நவராத்திரி கொலு வைக்கும் காலம் வருகிறது.
சமயம், காலத்துக்கேற்ற சில துணுக்குகள்.
சில மாத தமிழ் இதழ்களின் மூலம் நான் சுவைத்த சில
அடேடே விளம்பரங்கள்
---------------------
டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன ! ! !
அமாவாசையன்று கொலு வைத்து
பதினோராவது நாள் காலை எடுத்துவிட வேண்டும்.
ஆர்வமுள்ள கொலு பொம்மை மொத்த வியாபாரிகள்,
பத்து நாட்களுக்குள், உங்கள் ரேட்-ஐக் குறிப்பிட்டு விண்ணப்பிகவும்.
இப்படிக்கு சின்மயா நகர் சிக்கனம் சிங்காரி
-------------------------------------------------------
அன்பாய் அழைப்போம் ! ! !
கொலு வைத்தாலும் கூப்பிட அலுப்பா? கவலை வேண்டாம்;
ஒன்பது நாட்களும் நேரிலும் போனிலும் எஸ்.எம்.எஸ் அனுப்பியும்
கடிதம் எழுதியும் உங்கள் சார்பில் அழைக்க நாங்கள் தயார்
முதலில் அழைப்பு இறுதியில் பணம்.
திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்.
இப்படிக்கு கொருக்குப்பேட்டை கொண்டம்மா கொலு ஸர்வீஸ்
------------------------------------

சுண்டல் தயார் ! ! !
ஐந்து வருட அனுபவம். ரசித்து ருசிக்க
பத்து வகைகளில் சுவையான சுண்டல் ரெடி.
1)   சுமார் ரகம் - ஒரு கிலோ ரூபாய் இருநூறு மட்டும்
2)   சூப்பர் ரகம் – ஒரு கிலோ ரூபாய் முன்னூறு மட்டும்.
அமிஞ்சிக்கரை அம்மாமீஸ் கேண்டீன்
-----------------------------------------------------
இலவசம் இலவசம்
உங்க வீட்டு கொலுவுக்குக் கணிசமானக் கூட்டம் வருமா?
எங்கக் கடை விளம்பரங்களை உங்கள்
கொலுவில் ஒட்டிவைக்க அனுமதித்தால்,
தாம்பூலம், ஜாக்கெட்டுகளை
இலவசமாய் வழங்குகிறோம்.
ஜாபர்க்ஹான் ஜவுளிக் கடல்
------------------------------------------------
எங்களிடம் மேலும் சில துணுக்குகள், நூதன ஐடியாக்கள் உள்ளன.
ரஸித்து உற்சாகப்படுத்தினால் மற்றவைகளும் ப்ரசுரிக்கப்படும்.
இப்படிக்கு  Kodambakkam “Time Killer Press”

1 comment:

  1. கொலுவில் பாடுவதற்கு ஒன்பது நாட்களுக்கும்
    பாட்டுப்பாடுவதற்கு என்ன சன்மானம் உங்களால் கொடுக்கமுடியும் என்பதைத்தெரிவித்தால் வேண்டிய கட்டணக்குறைப்பு செய்து பாடித் தருகிறோம்
    .
    ப(ர்)ட்டு மாமி

    இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete