ஒருத்தி
மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்-
ஒருத்தி மகனாய்
ஒளித்து வளரத்
தரிக்கிலான்
ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப்
பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன
நின்ற நெடுமாலே.,உன்னை-
அருத்தித்து
வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க
செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும்
தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment