Friday, March 18, 2016

GO GO GO AWAY " EGO"

 
ரசமான விவாதம்’ : பெரியவாளின் சமையல் விளக்கம்.
குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?” அங்கிருந்த பக்தர்கள்சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்என்றார்கள்.
மஹான் பெரிதாகச் சிரித்தார்.
குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்என்றார். இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?
சார் இன்றய தினம் சூரியன் கிழக்கே உதிச்சார் தெரியுமா?
யார் சொன்னா? மேற்கே மறைந்து பின் பக்கமா வந்தார் சார். எதாவது தெரிஞ்ஞா சொல்லுங்க. 

அப்படியா.................
தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், 'தான்' என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டு, தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது. மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.
கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் சொன்னது: ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்திருந்தது. அது, அவருடைய நிலம் என்பதால், 'பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே...' என்றேன். உடனே அவர், 'நாசமாப் போக; மூணுமாசத்துக்கு முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன, விளையாட்டி என்ன...' என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்றிருக்கிறார்; இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது, என்று கூறினார் கிருபானந்த வாரியார்.
அதே போன்று தான் அகங்காரம்! அறியாமையின் இருப்பிடமான இந்த அகங்காரமே மனிதனின் அழிவிற்கும் அவனுடைய கர்ம வினைக்கும் காரணமாக இருக்கிறது. அகங்காரத்தால் அழிந்து போன தேவலோக பசுக்களின் கதை இது:
ஒரு சமயம்... சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
அப்போது, தேவலோக காராம் பசுக்கள், வெறிபிடித்து, ஆகாய மார்க்கமாக, ஹூங்காரம் இட்டப்படி போய் கொண்டிருந்தன. அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, கீழே தவத்தில் இருந்த சிவபெருமானைப் பார்த்து, 'அடடே... சிவபெருமான் சடைமுடியோடு தவம் செய்து கொண்டிருக்கிறாரே... இவருக்கு யார் காராம் பசு பாலால் அபிஷேகம் செய்யப் போகின்றனர். நாம் செய்தால் தான் உண்டு...' என்று, அகங்காரத்துடன் ஆகாய வீதியில் இருந்தபடியே சிவபெருமானின் திருமுடியில் பாலைப் பொழிந்தன.
சிவபெருமான் நிமிர்ந்து பார்த்தார்; காராம் பசுக்கள் அப்படியே இறந்து விழுந்தன.
காராம் பசுவின் பாலைக் கொண்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம்.
அப்படி இருக்கையில், காராம் பசுக்களுக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது?
அகங்காரம் தான்! எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், அகங்காரம் கொண்டவர்கள் துயரத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.
-------- நன்றி பி.என்.பரசுராமன்

விதுர நீதி!: துன்பமும், எதிர்ப்பும் கண்டு வருந்தாதவன், கவனமாகவும், கடுமையாகவும் உழைப்பவன், சூழ்நிலை கருதி, துன்பங்களை பொறுத்துக் கொள்பவன் எவனோ, அவனே, மனிதர்களில் முதன்மையானவன்; அவன், எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்.
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுஸ்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே - பகவத்கீதை

GO GO EGO AWAY
GO GO along with “I”
Little brain wants to rest
GO GO EGO AWAY

"I" is the smallest word in dictionary.
Not to be made biggest in anybody’s vocabulary

If someone corrects me I get offended.
That means my brain is affected by “EGO” virus.

Relationship never dies a natural death..
They are murdered by ego, attitude and ignorance.
-----------------------------------------------------------------------
அது சரி இவ்வளவு எழுதுகிறீர்களே. உங்களுக்கு EGO உண்டா...
 எனக்கு நிறைய இருக்கு. 
எழுதி, சொல்லி, கேட்டு அதை போக்கிக்கலாம் 
என்று முயற்சி செய்கிறேன். 
நீங்க எப்படி..........
------------------------------------------------------------------------------------------------