Sunday, March 27, 2016

Seven Mothers of Mankind

சுபாஷிதம் பகுதி - 2
11.अर्थातुराणां न गुरुनं गुरुर्नबन्धु: कामातुराणां न भयं न लज्जा
विद्यातुराणां न सुखं न निद्रा क्षुधातुराणां न रुविर्न रुचिर्नवेला
தனத்தில் ஆசையுள்ளவனுக்கு குருவும் இல்லை பந்துக்களும் இல்லை;
காமத்தில் பீடிக்கப்பட்டவனுக்கு பயமும் வெட்கமும் இல்லை;
வித்தையில் ஆசையுள்ளவனுக்கு சுகமும் தூக்கமும் இல்லை;
பசி உள்ளவனுக்கு ருசியும் இல்லை காலமும் இல்லை;
12.अहिंसा सत्यमस्तेयं शौचर्मिन्द्रयनिग्रह:
एवं सामाजिकं धर्म चातुर्वण्यैऽब्रवीन्मनु:
அஹிம்சை, உண்மை, திருடாமை, தூய்மை, புலனடக்கம் என்ற தர்மங்கள் நான்கு வர்ணத்தாருக்கும் பொதுவானது என மனு கூறியுள்ளார்.
13.आचार: परमो धर्म: श्रुत्युक्त: स्मार्त एव च
तस्माद अस्मिन सदा युक्तो नित्य स्यादोत्मवान्व्दिज:
நல்லொழுக்கங்கள் உயர்ந்த தருமம் என வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்டுள்ளது;
ஆதலால் ப்ராமணர்கள், தான் என்பதை அடக்கிக்கொண்டு அந்த நல்லொழுக்கங்களை எப்பொழுதும் கடைப்பிடித்தல் வேண்டும்;
14.आदौ माता गुरो: पत्नी ब्राह्मणी राजपत्निका
धेनुर्धात्री तथा पृथ्वी सप्तैते मातर: स्मृता:
முதலில் அம்மா பிறகு குரு பத்னி, ப்ராமணரின் மனைவி, அரசரின் மனைவி; மேலும் பசுமாடு, செவிலித்தாய் அவ்வாறே பூமி
எழுவரும் தாயாகச் சொல்லப்படுகிறது.
15.आपदां अथित: पन्था इन्द्रियाणामसंभव:
तज्जय: सम्पदां मार्गो येनेषटं तेन गम्यदाम्
புலன்களை அடக்காமை துன்பத்திற்கான வழியாகும்;
அதனை அடக்கி வெற்றி கொள்ளுதல் வெற்றிக்கு வழியாகச் சொல்லவர். எது விருப்பமோ அவ்வழியில் செல்லலாம்.
16.आप्तद्वेषाद्भवेन्मृत्यु: परद्वेषाध्दनक्षय:
राजद्वेषाद्भवेन्नाशो ब्रह्माद्वेषात्कुलक्षय:
நெருங்கிய மனிதரின் பகையினால் மரணம் ஏற்படும்;
அந்நியர்களின் பகையால் செல்வங்களின் அழிவு ஏற்படும்;
அரசினிடம் பகையால் நமக்கே அழிவு ஏற்படும்;
ப்ராமணனிடம் பகையால் குலத்தின் அழிவு ஏற்படும்.
17.उदारस्य तृणं वित्तं शूरस्य मरणं तृणम्
विरक्तस्य तृणं भार्या नि:स्पृहस्य तृणं जगत्
தாராள மனப்பான்மையுடையவனுக்கு செல்வம் புல்லிற்கு சமம்;
சிறந்த வீரனுக்கு மரணம் புல்லிற்கு சமம்;
விரக்தி அடைந்தவனுக்கு மனைவி புல்லிற்கு சமம் ஆசையற்றவனுக்கு உலகமே புல்லிற்கு சமம்.
18.उद्योहिनं पुरुषसिंहमुपैति लक्षमी: दैवेन देयमितिं कापुरुषा वदन्ति
दैवं निहत्य कुरु पौरुषमात्मशक्त्या यत्ने कृते यदि न सिध्यति कोऽत्रदोष:
முயற்சியுடைய உயர்ந்தமனிதனை செல்வம் சென்றடையும்;
விதியால் கொடுக்கப்படும் என்று தீயவர்கள் சொல்லுவார்கள்;
விதியை விட்டு முயற்சியை தன் சக்திக்கு செய்தல் வேண்டும்; முயற்சி செய்து பலன் தராவிட்டாலும் அது குற்றம் இல்லை.
19.उपकार: परो धर्म: परार्थ कर्म नैपुणम्
पात्रे दानं पर: काम: परो मोक्षो वितृष्णता
உபகாரம் செய்வது உயர்ந்த தருமம்;
திறன்பட வேலை செய்வது உயர்ந்த செல்வம்;
தானம் அடைபவரை அறிந்து ஈதல் உயர்ந்த செயல்;
ஆசை இல்லாமல் இருத்தல் உயர்ந்த மோக்ஷம்.
20.एकेन सुष्कवृक्षेण दह्यमानेन वह्निना
दह्यते हि वने सर्व कुपुत्रेण कुलं यथा
எவ்வாறு நெருப்பினால் ஒரே ஒரு காய்ந்த வ்ருக்ஷத்தினால் காடு முழுவதும் தீயில் எறிந்துவிடுமோ அது போல் தீயகுணமுடைய மகனால் குலம் முழுவதும் அழியும்

No comments:

Post a Comment