Friday, March 25, 2016

Nallan Chakravarthy Krishnamaacharyulu

நல்லான் சக்ரவர்த்தி க்ருஷ்ணமாச்சாரியார் அவர்கள் ஒரு பெரிய சங்கீத மேதை. த்யாகராஜர் சீடர்களின் வம்சாவளியில் ஐந்தாவது தலைமுறையில் பயின்றவர். வயலின் வித்வான், ஆசிரியர், ஹரிகதையில் சிறந்த நிபுணர். அதற்கான இலக்கணத்தை சொன்னவர். மேலும் ஸம்ஸ்க்ருத மொழியில் சிறந்தவர். 
1924ம் ஆண்டு க்ருஷ்ணா மாநிலத்தில் ஜக்கைய்யபேட்டா என்ற ஊரில் ஜகந்நாத வெங்கடாசார்யுலுவுக்கும் வேங்கடரமணம்மாவிற்கும் பிறந்து எண்பத்தாறு ஆண்டுகள், சங்கீதம், ஹரிகதா, தெலுங்கு, ஸமஸ்க்ருத ஸாஹித்யங்கள், நல்ல ஆசான் என்ற பல பரிமாணகளில் தனது பாண்டித்யத்தை மிளிரச் செய்தவர். இவரது குரு திரு.பாருபல்லி ராமா க்ருஷ்ணய்யா பந்துலு என்பவர் டாக்டர் மங்கலம்பல்லி பாலமுரளீக்ருஷ்ணா, மற்றும் அன்னவருப்பு ராம ஸ்வாமி அவர்களுக்கும் சங்கீததில் குருஆவார். ஆந்திரப் ப்ரதேஷ சங்கீத அகாடமி இவருக்கு “கான கலா ப்ரபூரணர்” என்ற பட்டத்தை அளித்துள்ளது. 1948ல்ருந்து 1983 வரை விஜயவாடா ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளார். முப்பதிற்கும் மேற்பட்ட ஸாஹித்யங்கள், பல வர்ணங்கள், தில்லானாக்கள் என்று இவர் இயற்றிய ஸங்கீத முத்துக்களுக்கு ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இவரது ஸமஸ்க்ருத நாடகம் “ம்ருத ஸஞ்சீவனம்” என்பது ஒரு அருமையான காவியமாகும். அதனை தமிழில் மொழிபெயர்த்து, ஒரு எழு அங்கங்ளில் இனி வரும் பதிவுகளில் தர உள்ளேன். காளிதாஸனுக்கும், கம்பனுக்கும் அருளிய ஸரஸ்வதி தேவி எனக்கும் அருள் செய்ய ப்ரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment