Saturday, March 26, 2016

NITHICHANDRIKA - நீதிமொழி

ஸுபாஷிதம் என்றால் நல்ல அழகான, இனிமையான சொற்கள் என்று பொருள்படும். சமஸ்க்ருத மொழியில் விவேகமுள்ள, பாண்டித்யமுள்ள நீதி மொழியின் தொகுப்பினை ஸுபாஷிதம் என்று அழைப்பர். அது ஒரு குறும் கதையாக இருக்கலாம். நல்ல செய்யுளாக இருக்கலாம். உலகில் தொன்மையான, பல மொழிகளுக்கு தாய் போன்ற இம் மொழியில் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னமே பல பண்டிதர்கள் வாய் வழியாகும், ஒலைச் சுவடிவழியாகவும், சீடர்கள் வழியாகவும் எண்ணிலடங்கா ஸுபாஷிதங்களை நமக்கு வழங்கியுள்ளார்கள். தமிழில் திருகுறள், ஆத்திச்சுவடி, நாலடியார் என்ற பல ஸுபாஷிதங்கள் உள்ளன. அது போன்று விதுர நீதி, கீதை, பஞ்ச தந்த்ர கதைகள், பர்துஹரியின் முன்னூறு செய்யுள்கள், சோமதேவ பட்டாவின் பல செய்யுட்கள், சாணக்கிய நீதி என்று சமஸ்க்ருத மொழியில் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த வலைத்தளத்தில் மற்றொரு பதிவின் மூலம் பர்துஹரியின் முன்னூரு செய்யுட்களின் பொழிப்புரையினை மற்றுமொரு வரிசையில் வருகின்றன. இந்த வரிசை “நீதிசந்திரிகா” என்ற ஒரு தொகுப்பின் பதிப்பாகும்.
----------------------------------------------------------------------------------------------------------
1.अजरामरवत् प्राज्ञो विद्यामर्थञ्च साधयेत्
गृहीत इव केशेषु मृत्युना धर्ममाचरेत्
கற்றறிந்தவர்கள் முதுமையும், மரணமும் இல்லாதவன் போல்
கல்வியையும் செல்வத்தையும் சம்பாதிக்க வேண்டும். எவ்வாறு என்றால், எமன் தலை முடியைப் பிடிப்பது போல்.
2.अत्यन्त्कोप: कटुका च वाणी,  दरिद्रता च् स्वजनेषु वैरम्
नीचप्रसङ्ग: कुलहीनसेवा,   चिह्नानि देहे वरकस्थितानाम्
அளவற்ற கோபம், கடுஞ்சொல் ஏழ்மை நிலை உறவினர்களிடம் பகை நீசர்களுடன் சேர்க்கை தீயவர்களுக்கு சேவை இவை நரகத்தில் உள்ளவர்களின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள்.
3.अनभ्यासेन वेदानामाचारस्य च वर्जनात्
आलास्यादन्नदोषाच्च मृत्युर्विप्राञ्चिधांसति
வேதங்களை அப்யாஸம் செய்யாததாலும், நல்ல ஒழுக்கங்களை கைவிடுவதாலும், சோம்பலினாலும், தோஷமுள்ள உணவை உண்பதாலும், எமன் அந்தணர்களை கொல்லுகிறான்.
4.अनभ्यासे विषं विद्या, अजीर्णे भोजनं विषम्
विषं गोष्टी दरिद्रस्य भोजनान्ते जलं विषम्
அப்யாஸமற்ற கல்வி விஷம், ஜீரணமாகாத பொழுது உணவு விஷம், ஏழ்மையில் உள்ளவர்க்கு தீயவர் சேர்க்கை விஷம், உணவின் முடிவில் தண்ணீர் விஷம்
5.अनारोग्यमनायुष्यस्वग्यं जातिभोजनम्
अपुण्यं लोकविव्दिष्टं तस्मात्तत्परिवर्जयेत्
அதிகமாக உண்ணுதல் என்பது ஆரோக்யமற்றது; ஸ்வர்கத்தைத் தடுப்பது; புண்யத்தைக் குறைப்பது; ஆயுளைக் குறைப்பது. உலகத்தோரால் வெறுப்பது; ஆகையால் அதனை விட்டு விடுதல் வேண்டும்
6.अनित्यानि शरीराणि विभवो नैव शास्वत:
नित्यं सन्निहितो मृव्यु: कर्तव्यो धर्मसंग्रह:
உடல் அனைத்தும் நிலையற்றது; செல்வங்களும் நிலையற்றது; எப்பொழுதும் மரணமானது அருகில் இருப்பது; ஆகையால் தர்மகார்யங்கள் செய்யப்பட வேண்டும்
7.अनेकसंशयोच्छेदि परोक्षार्थस्य द्र्शनम्
सर्वस्य लोचनं शास्त्रं यस्य नास्त्यन्ध एव स:
அனைத்து சந்தேகங்களைப் போக்கடிப்பது, தெரியாத கருத்துக்களை காண்பித்துக் கொடுப்பது, அனைத்திற்கும் கண்போன்ற சாஸ்த்ரங்களின் அறிவு; இத்தகைய அறிவு இல்லாதவர்கள் குருடன் போலே.
8.अन्नदाता भयत्राता विद्यादाता तथैव
जनिता चोपनेता च् पञ्चैते पितर: स्मृता:
உணவைஅளிப்பவன், பயத்தைப் போக்குபவனன், கல்வியை அளிப்பவன் பிறப்பிப்பவனன், உபநயனம் செய்விப்பவன்  என்ற ஐவரும் தந்தை என ஸ்ம்ருதி சொல்கிறது.
9.अपमानं पुरस्कृत्य मानं कृत्वा तु पृष्ठत:
स्वकार्यमुध्दरेत्प्राज्ञा कार्यध्वंसो हि मूर्खता
கற்றறிந்த பெரியோர்கள் அவமானத்தை முன்னிட்டு கௌரவத்தை விலக்கி தான் தொடங்கிய செயலை திறம்படச் செயவர்; செயலை அழிப்பது என்பது முட்டாள்தனமாகும்.
10.अभिवादनशीलस्य नित्यं वृध्दोपसेविन:
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम्
எப்பொழுதும் பெரியோர்களுக்கு சேவை செய்பவது பணிவோடு இருப்பது என்ற நல்ல குணங்கள் இருப்பவனுக்கு ஆயுள், கல்வி, புகழ், பலம் என்ற நான்கும் வளர்கின்றன.