Sunday, April 21, 2013

PRIYE CHAARUSEELE - 19th ASHTAPATHI


ஜயதேவர் 18வது அஷ்டபதியை முடித்தார். 19வது அஷ்டபதியை “வதஸியதி” என்று ஆரம்பித்து ஆறு சரணங்கள் எழுதப்பட்டன. ஏழாவது சரணத்தை மனஸால் அமைத்த போது “காமமென்ற கொடிய விஷம் என் தலைக்கேறிற்று. இளந்துளிரைப் போல் சிவந்து ம்ருதுவாயிருக்கும் உன் பாதத்தை என் தலைவை, கருட மந்திரத்தைப் போல் அது விஷத்தை இறக்கும்” என்று க்ருஷ்ணன் ராதையை வேண்டினதாய்த் தோன்றிற்று. இதென்ன விபரீதம். அபசாரமல்லவா என்று நினைந்து பத்மாவதியிடம் ஒலைச் சுவடியையும், எழுத்தாணியையும் கொடுத்து புத்தி தெளிய குளிக்கச் சென்றார். சிறிது நேரம் கழிந்து எண்ணைய்த்தலையுடன் வந்து, கல்பனை திடீரென்று தோன்றிற்று என்று கூறி 19வது அஷ்டபதியை முடித்துச் சென்றார். ஸ்நானம் செய்து போஜனம் செய்தபின் மறுபடியும் எழுத எத்தனித்த போது கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்கவைத்தது. எதை எழுத வேண்டாம் என்று பாதியில் வைத்துச் சென்றதை முடித்துவைத்துள்ளதால், சந்தேகத்துடன் வினவ உண்மை தெரிந்தது. பகவானின் லீலையை கண்டு மகிழ்ந்து, பத்மாவதிக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். என்றாலும் பத்மாவதியை தனக்குக் கிடைத்த நிதி என்று உணர்ந்து, பின் வரும் அஷ்டபதியில் பத்மாவதியின் பெயரையும் சேர்த்து பாடல்களை முடித்தார். இந்த வ்ருத்தாந்தம் நாம் எல்லோரும் அறிந்ததே.
ஒரு நாள் ராணியும் பத்மாவதியும் சம்பாஷிக்கும் போது, கணவன் இறந்தால் கற்புடைய மனைவியின் உயிர் உடனே பிறியவேண்டும் என்று பத்மாவதி சொல்ல, ராணி அதை நம்ப மறுத்து விவாதம் நடந்து முடிந்தது. மற்றொறு சமயம் ராஜனும், ஜயதேவரும் அருகிலுள்ள ஊர் சென்றபோது, பத்மாவதி சொன்ன கூற்றை பரிக்ஷிக்க, ராணி, ஜயதேவர் இறந்த்தாக ஒரு பொய்யைச் சொல்ல, அந்த க்ஷணத்திலே பத்மாவதியின் உயிர் பிரிந்தது. ராணி பயந்து நடுங்கினாள். அரசன் ராணிக்குத் தண்டனை அளிக்கத் தீர்மானித்தான். அதை அறிந்த ஜயதேவர் வருத்தமுற்று, 19வது அஷ்டபதியை மறுபடியும் பாட, தூங்கி எழுந்தது போல் எழுந்து வந்து கணவனை வணங்கி நின்றாள். உலகம் இந்த திவ்ய தம்பதிகளின் பெருமையை அன்றே உணர்ந்தது. இதுவும் கண்ணனின் லீலையே. ஆகையால் இந்த அஷ்டபதியை முகாரி ராகத்தில் பாட ப்ராசீனமாக வழி வழியாக வந்துள்ளது. பகவானை நெகிழ்ந்து அழைக்கவும்,ஸ்ருங்கார ரஸமுடன் பாடவும் உகந்த ராகம் முகாரி. 
கண்ணனின் அருள் கிட்ட நாம் எல்லோரும் இந்த அஷ்டபதியை உருகிப் பாடுவோம்.

Music Links People Globally


Shri Thiruvaiyaru Krishnan, popularly known as TSR Krishnan in LA, who is regularly giving concerts, naamasankeerthanam and conducting group music of various renowned “Carnatic Vaagyeyakaras” in Chinmaya Misssion, Shiva Vishnu Temple, Livermore, Hindu Temple of Kern Country, SIMA Los Angeles, US has circulated a mail in praise of violinists viz. Arun and Shiva.
Dear Friends and family:
I felt that it is time I shared with you all, my immense happiness about two of my favorites in this part of the world - about children who are multi faceted/talented, (always) children in my heart but respected adults in the Global Music World.
Arun is already an accredited grand violinist and Shiva, his kid brother is effortlessly reaching the charts as a sought-after accompanist. 
Both boys are brought up with samskAram, soft spoken, and are blessed with humility which is becoming a rare trait (more so in India and to some lesser extent in the rest of the world).
Arun has been a software specialist and working in So Cal but globe-trots as a musician performing all over, especially about 20+ concerts in Madras Music annual Season; 
As a varsity student, he has been an A'capella hero and a fusion artist in demand; 
Very conventionally trained under the great M C and now under Delhi S, he also underwent rigorous western violin training for years - thus making him a sought after Violin Artist; 
He played music score in a Tamil movie and sang in it too; has a few albums in the carnatic music world...the list is long.
His younger sister VANi is already an up and coming vocalist often seen (with Ranjani/Gayatri) in the Madras Music Circuit for a couple of years now and occasionally visits the US! (settled in Chennai after her undergrad in the US).
Shiva is an UCLA student in hot demand (Best male solo violinist in Anahat 2011 and best vocalist in 2012 in the Bay area); similar pedigree and a young musician in great demand.
Arun was one of the grand accompanists in the South Indian Music Academy (LA) performance on December 1, 2012 (the full live recording will be posted onsankeertanam.com shortly).

Don't think that they are simply ordinary folk entrapped in self imposed confinement of 'purism'. They are avid learners and can enjoy and reproduce any music through their fingers.They are as much an ustAd in (Indian) Film music and western tracks, as facile as they could capture a large audience by their classical concerts.

The Rest is for the reading and listening - See below:


Saturday, April 20, 2013

Rudhra Geethai

ருத்ர கீதை என்ற ஸ்லோகங்களைப் பற்றி வலையில் தேடிய போது எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை உங்களுடன் ஆராய்கிறேன். உங்களது கருத்துக்களையும், இதனைப் பற்றி நீங்கள் அறிந்த மற்றய தகவல்களயும் இந்த தபாலின் விமர்சனப் பகுதியை உபயோகித்து, எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. ருத்ர கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் வராஹ புராணத்தில் 70-72 பகுதிகளில் உள்ளது. நான்காவது ஸ்கந்தத்தில் 16லிருந்து 79 வது ஸ்லோகங்கள் ருத்ர கீதையாய் உள்ளன.
2.மொழி ஆராய்ச்சியாளர்கள் இந்த வேத புராணங்கள் எழுத்து வடிவில் 6th century B.C. to the 12th century A.D என்ற காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் அளிக்கின்றனர்.
3.புராணங்களை முக்கிய புராணங்கள் அல்லது மஹா புராணங்கள் மேலும் உப புராணங்கள் என்று வகைப் படுத்துகின்றனர்.
4. மஹாபுராணங்களில் உள்ள பஞ்ச கீதைகள் பின்வருமாறு
1. உத்தவ கீதா, 2. ருத்ர கீதா, 3. பிக்ஷு கீதா,
4.ஸ்ருதி கீதா, 5.ஹம்ஸ கீதா.
5. ருத்ரன் ப்ரசேதஸ் என்ற அரசனுக்கு பகவான் நாரயணரை எவ்வாறு பூஜிக்க வேண்டும், அதனால் அடையும் உயர்ந்த மார்க்கம் என்ன என்ற பல செய்திகள் உபதேசித்தார். அதுவே ருத்ர கீதை எனப்படும். இந்த கீதையைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை இங்கே கொடுத்துள்ளேன். படித்து உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Thursday, April 18, 2013

Ragasri Ramayanam

ஐம்பது வரிகளில் “ராகஸ்ரீ” யின் ராம காவியம்
குர்வர்த்தே த்யக்த ராஜ்யோ வ்யசரதநு வனம்
பத்ம பத்ப்யாம் ப்ரியாயா:
பாணிஸ்பர்ஷாக்ஷமாப்யாம் ம்ருஜிதபதருஜோ
யோ ஹரீந்த்ராநுஜாப்யாம்
வைரூப்யாச் சூர்பணக்யா: ப்ரிய விரஹருஷா -
ரோபித ப்ரூ விஜ்ரும்ப –
த்ரஸ்தாப்திர் பத்த ஸேது: கலதவதஹன:
கோஸலேந்த்ரோவதான்ன:
என்று சுகர் நான்கு வரியில் ராமாயணம் முழுவதையும் சொல்லி ராமனை த்யானிக்கிறார்.  முதன் முதலில் வால்மீகி ராமாயணம் தேவநாகரியில் எழுதப்பட்டது. 
இதனை ஆதாரமாகக் கொண்டு நமது இந்தியாவில் பல பாஷைகளில் பலர் காவியாமாகப் படைத்துள்ளார்கள். 50000 வரிகளில் வால்மீகியால் படைக்கப்பட்ட இந்த காவியத்தை கம்பன் தமிழில் 12வது நூற்றாண்டில் கம்பராமாயணமாகப் படைத்தான். 14வது நூற்றாண்டில் துளசி தாஸர் “ராமசரிதமானஸ்” என்ற ஒருகாவியத்தை ஹிந்தியில் படைத்தார். ப்ரேமானந்த் என்பவர் குஜராத்தியிலும், க்ருத்திவாஸ் வங்காள மொழியிலும், பலராம தாஸ் ஒரியாவிலும், மராத்தியில் ஸ்ரீதரா என்பவரும், சந்தஜா என்பவர் மைதிலி என்ற மொழியிலும், 15ம் நூற்றாண்டில் ரங்கநாதா என்பவர் தெலுங்கிலும், 16வது நூற்றாண்டில் தொரவே ராமாயணா என்று கன்னட்த்திலும், துந்த்சத்து எழுத்தச்சன் மலயாளத்திலும் ராமாயண காவ்யத்தைப் படைத்து எல்லோருடைய மனத்திலும், உடலிலும் ராமாயணம் என்ற மூச்சுக் காற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
கீர்வானணை: அர்த்யமாநோ தஸமுக நிதனம்
கோஸலேஷு ரிஸ்ய ஸ்ருங்கே
புத்ரீயாமிஷ்டிம் இஷ்ட்வா த்துஷி தசரத –
க்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம்
தத்புக்த்வா தத் புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு
ஜாதகர்பாஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத
பரதேநாபி ஸத்ருக்ன நாமா
என்று ஆரம்பித்து, ஸ்ரீ நாராயண பட்டத்ரி 34, 35வது தஸகங்கள் மூலம் இருபது ஸ்லோகத்தால் ராமாயண காவ்யத்தை நமக்கு தந்துள்ளார். இதனை மூலமாகக் கொண்டு எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் 50 வரிகளில் இந்தக் காவியத்தை தமிழில் படைத்து இசை அமைத்துள்ளார். “ராகஸ்ரீ” என்ற அங்கிதத்துடன் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்துள்ளார். 
2000வருடம் தொடங்கியவுடன் ராகஸ்ரீ பாடல்களை, தொலக்காட்சி முன்னாள் இயக்குனர் திரு.ராம க்ருஷ்ணன் அவர்கள் (நாதமுனி நாராயண ஐய்யங்காரின் சீடர்),  இந்தியாவில் ம்யூசிக் அகாடமி மூலம் ப்ராபல்யப்படுத்தினார். அதே சமயம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரம் மூலமாக என் தமயனார் திரு.திருவையாறு க்ருஷ்ணன், ராகஸ்ரீ பாடல்களை Los Angeles SIMA மூலமாகக் கொண்டுவந்துள்ளார். எனது சகோதரி திருமதி.பூமா நாராயணனும், எனது சகோதரன் திரு.திருவையாறு க்ருஷ்ணனும் பரமாச்சாரியார் முன்னிலையில் பாடி ஆசி பெற்ற இந்த ராகஸ்ரீயின் ராம காவியத்தை, இன்று ராமநவமியை முன்னிட்டு, உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

Tuesday, April 16, 2013

Yours Musically


தூத்துக்குடியில் இருந்து கொண்டு ஒரு இசைப்பயணத்தை நடத்திவரும் சேஷா நம்பிராஜன் தம்பதியர்களை தினகரன் தனது நாளேடு வாயிலாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
சிறுவன் கௌதம் மூலம் தொலைக்காட்சி நேயர்கள் இந்த தம்பதியர்களது சேவையை முன்பே அறிந்தனர்.

"Ladders among the humans "

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பின்னால் ஒரு பெண் தான் உள்ளார்கள் என்பது ஆங்கிலப் பழமொழி. இந்த தம்பதியர்கள் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் உந்துதலால் இருவருமே தூத்துக்குடி முழுவதும் உயர்வாகப் பேசப்படும் ஒரு தம்பதியினர் ஆவார். செல்வம், மதம், சாதி என்ற எந்த வேறுபாட்டிற்கும் இடம் தராமல் இநத இசைப்பயணத்தை மேற்கொள்ளும் இந்த தம்பதியினரின் சேவை நன்கு தொடர எல்லாம் வல்ல இறைவனை நாம் என்னென்றும் வேண்டுவோம்.

Saturday, April 6, 2013

Gangastavam - Jaydeva's ashtapathi

ஜயதேவர் என்று சொன்னவுடன் நான் அறிந்தது இருபத்து நான்கு அஷ்டபதிகளே. புதுக்கோட்டை கோபாலக்ருஷ்ண பாகவதரின் மைந்தர் சஞ்சீவி பாகவதர் வெளியிட்டுள்ள ஒரு அறிய புத்தகத்தில் இருந்து நான் அறிந்த ஒரு செய்தி பின் வருமாறு.


Land of God & Goddess - Dev Bhoomi !!! Discover the importance of Ma Ganga in this spellbinding journey to the Himalayas!
The epic journey to find the source of the Ganges . Reaching the temple of Gangotri - the place where Hindus believe that Ganges first appeared on Earth. Further on we will also trail Kedarnath, Valley of Flowers, Yamunotri and Badrinath.
Nanda Devi is India's second highest peak and shelters the Bhyander Valley, home to the remarkable Valley of Flowers. Covered in snow for the majority of the year, it is transformed when the snow melts during the short summer and the high meadows become carpeted in spectacular flowers of every colour. Fantastic cinematography from the epic series of Ganges.
Courtesy - GK Travel & Tours.

Friday, April 5, 2013

Agoris - Unique sadhus


வடமொழிச் சொற்களை நாம் கையாளும் பொழுது சொற்களின் அர்த்தங்களை சரியாக உணராமல் பயன்படுத்துகையில் அர்த்தங்கள் அனர்த்தங்களாக மாறுகிறது. துற்நாற்றத்தை முகர்ந்த நம்மவர்கள் “நாற்றமடிக்குது” என்பர். நாற்றம் என்பது மணத்தைக் குறிக்கும் சொல். “கேவல்” என்ற வடமொழிக்கு “மேல்நிலையானது” என்று பொருள்படும். அதனை “கேவலம்” என்று தமிழில் தாழ்ந்த நிலைப்பாட்டிற்குச் சொல்லுவர். அதே போல் “அகோரம்” என்ற சொல் ரம்மியமான ரசிக்கத்தக்க நிலையினை உணர்த்தும். ஆனால் நாம் “அகோரம்” என்ற சொல்லை நடைமுறையில் தவாறாக கையாள்கிறோம்.
வடநாட்டு யோகிகளை அகோரிகள் என்பர்.அவர்களை கேவலமானவர்களாகச் சொல்லுவர். அதாவது தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்கள் கோரமற்றவர்கள். அதாவது “அ-கோரி”. அகோரிகள் பிணம் தின்னும் சாதுக்கள் என்றும் கூறுவர். தங்களை காணாமல் இருப்பதற்காகவும், எவரும் தங்களை பின்தொடர்ந்து அவர்களாது ஏகாந்தமான சூழ்நிலையைக் கெடுக்காமல் இருப்பதற்காகவும் அவர்கள் செய்யும் யுக்திகளில் ஒன்று பிணம் தின்பது போல் ஒரு ப்ரமிப்பை உண்டாக்குவது என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளர்
“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ்  வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”.  
விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. சொன்னவர் ஒரு அகோரி.
நான் வலையில் படித்த சுவையான செய்தியை இங்குள்ள பெட்டியில் கொடுத்துள்ளேன். படித்து ரசியிங்கள். இதனை எளிய தமிழில் எழுதி நாம் படிப்பதற்காக தொகுத்து அளித்தவர்க்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.