Friday, September 27, 2013

VIRACHITHA CHADUVA - 20th ASHTAPATHI

20வது அஷ்டபதி
ஸுசிரம் அனுநயனே ப்ரீணயித்வா ம்ருகாக்ஷீம்
கதவதி க்ருதவேஷ கேஸவே குஞ்ஜ ஸய்யாம்
ரசித ருசிர பூஷாம் த்ருஷ்டி மோக்ஷே ப்ரதோஷே
ஸ்புரதி நிரவஸாதாம் காபி ராதாம் ஜகாத
இந்த அஷ்டபதியை ஆரம்பிக்கும் பொழுது, நாடக பாணியில் ஒரு முன்னுறையாக இரவின் வருகையையும், ராதையின் அலங்காரத்தையும் விவரித்து, சிறிது காலம் பிரிந்த ராதையும் க்ருஷ்ணனும் எவ்வாறு பிரிவை விடை கொடுத்து அனுப்புகிறார்கள் என்பதே சாரம்.
இது வஸந்த ராகத்தில் யதி தாளத்தில் பாடப் படவேண்டுமென்று மூலக்ரந்தத்தில் சொல்லப்பட்டதாக 1940ல் ப்ரஸுரித்த ஒரு சுவடி ரூபத்தில் உள்ள புத்தகத்தில் உள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் உள்ள சாரம்சம் பின்வருமாறு:
இந்த அஷ்டபதியுடன் முடிவடையும் “ஸ்ரீஹரிதாள ராஜி ஜலதர விலஸிதமென்ற 20வது ப்ரபந்தத்தின் லக்ஷண ஸ்லோகத்தில் இதற்கு நந்தமென்ற ராகம் ஏற்படுத்தியிருக்கிறது. தாளங்கள் முறையே ஆதி, ப்ரதிமண்டம், சதுர்மாத்ர மண்டம், அட்டம், வர்ணயதி, நவமாத்ரா மண்டம், நிஸ்ஸாரு, ஜம்பை, த்ருதமண்டம், ரூபகம், ப்ரதிதாளம், த்ரிபுட, ஏகதாளி என்று காணப்படுகிறது. கரஹளி, துண்டகிளி, புக்தா, கொம்பு (ஸ்ருங்கம்), சங்கு(சங்கம்), படஹம், ஹுடுக்கம், முரஜம், கரடா, ருண்டா, டமரு, டக்கா, பாடாவென்ற வாத்யங்களில் வாசிக்கப்படவேண்டும்.
எங்கள் குருநாதர் பஜனை ஸம்ப்ரதாயத்தில் பாடியபடி நான் பாடியுள்ளேன். இத்தனை வாத்யங்களை சொல்லியிருப்பதால், ஒரு மாதிரிக்கு, கேரள செண்டை வாத்யத்தின் ஒலிப் பதிவினை ஒரு குறுந்தகடு வாயிலாக சேர்த்து, அந்த லயத்திற்கு தகுந்தார்போல் பாடியுள்ளேன். இந்த முயற்சியில் ஸ்ருதி, தாள பேதங்கள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

Wednesday, September 25, 2013

Greatness of Thulsi in Narayana Theerthar's "Tharagam"

நாராயண தீர்த்தர் தனது தரங்களில் பல பாடல்களில் பல புராணங்களின் சாரத்தை பாடல் வடிவில் நமக்கு எளிய முறையில் அளிக்கிறார். முன் செய்த பிறவியின் செய்த நற்பயனால் ஆயர்பாடியில் மங்கையாகப் பிறந்த கோபிகை, கண்ணனை குறித்து நமஸ்காரம் செய்து இவ்வாறு கூறுவதாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

 ராகம் பிலஹரி                தாளம் ஆதி
பல்லவி
பூரய மம காமம் கோபாலா
அனுபல்லவி
வாரம் வாரம் வந்தனமஸ்து தவ வாரிஜதளநயன
சரணங்கள்
1. மன்யேத்வாமிஹ மாதவ தைவம்
மாயா ஸ்வீக்ருத மானுஷ பாவம்
தன்யைராக்ருத தத்வஸ்வபாவம்
தாதாரம் ஜகதாமதிவிபவம்.

2. ப்ருந்தாவனசர பர்ஹாவதம்ஸ
பக்த குஞ்ஜவன பஹுதரவிலாஸ
ஸாந்த்ராநந்த ஸமுத்கீர்ணஹாஸ
ஸங்கதகேயூர ஸமுதிததாஸ

3. மத்ஸ்யகூர்மாதிதச மஹிதாவதாரா
மதனுக்ரஹாதர மதன கோபாலா
வாத்ஸல்யபாலித வர யோகிப்ருந்த
வரநாரயணதீர்த்த வர்த்திதமோத
துளஸியின் மேன்மை பத்ம புராணத்திலும், ஹரி பக்தி விலாஸ நூலிலும் கூறப்பட்டுள்ளன. அதன் சாரத்தை தரங்கிணியில் இந்த பாடலின் இரண்டாவது சரணத்தின் மூலம் நினைவு படுத்திகிறார்.
இதன் மூலம் நாம் அறிந்த்து.
துளஸிச் செடியின் 
v  கீழ் பாகத்தில் கங்கை முதலான புண்யதீர்த்தங்கள் உள்ளன.
v  நடுபாகத்தில் அனைத்து தெய்வங்கள் வாசம் பண்ணுகின்றன.
v  மேல் பாகத்தில் எல்லா வேதங்களும் ஒலிக்கின்றன.
v  ப்ருந்தாவனம் அனைவராலும் பூஜிக்கப் படுகின்றன.
v  ப்ருந்தாவனம் உலகத்தையே தூய்மைப்படுத்துகிறது.
v  இலை மலர்களுள் மிகச் சிறந்த்தாகும்.
துளஸிச் செடியினை / இலையினை
v  ஒருவன் பார்த்தால் அவனது பாவக்குவியல்கள் அகலுகின்றன.
v  தொட்டவன் உடல் தூய்மை அடைகிறது.
v  வணங்கினால் பிணிகள் அகலுகின்றன.
v  நீரை ஊற்றினால் யமபயம் அகலுகிறது
v  வளர்த்தால் க்ருஷணரின் அருகாமையை அடைகிறோம்.
v  க்ருஷ்ணரின் திருவடிகளில் சேர்த்தால் மோக்ஷத்தை அளிக்கிறது.
v  கார்த்திகை மாத முப்பது நாட்களில் துளஸியை நட்டு வளர்க்கவோ, பார்க்கவோ, தொடவோ, த்யானிக்கவோ, வணங்கவோ, பூஜிக்கவோ செய்தால் ஒரு யுகத்தில் செய்த பாவம் அகலுமாம்.
துளஸி இதழின் / இதழ்களால்
v  நடுவில் கேசவனும்
v  நுனியில் ப்ரம்மதேவனும்
v  அடிகாம்பில் சிவபெருமானும் எப்போதும் இருக்கின்றார்கள்
v  விஷ்ணுவையும், சிவனையும் பூஜித்தால் மோக்ஷத்தை அடைகிறான்.

v  தானம் செய்தால் பித்ருக்களுக்கு அக்ஷய த்ருப்தியை அளிக்கும். கயா சிராத்த பயனைக் காட்டிலும் அதிக மடங்கு பலன் அளிக்கும்.

திருவொற்றியூர் நாராயணன்- (TIRUVOTTIYUR NARAYANAN)


திருவொற்றியூர் நாராயண நம்பூதிரி அவர்கள் 24 செப்டம்பர் 2013 அன்று இறைவனடி சேர்ந்தார். இவரைப் பற்றி கூறும்போது நம் நினைவுக்கு வருவது அவரது இனிமையான சங்கீதம், தைலதாரை போன்ற அவரது இனிமையான குரல் வளம், ஹார்மோனியத்துடன் இழைந்த சங்கீதம், திரு GNB அவர்களின் பல அபூர்வ ஸாஹித்யங்கள், இனிமையான பேச்சு, மற்றவர் மனதை புண்படுத்தாத ஒரு மனதிற்கு இதமான உரையாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிறர் ஆதரிக்காத தெரு நாய்கள், பூனைகள், சிறகு அடிபட்டு கீழே விழுந்த கழுகு என்று பல வாயில்லாத ஜீவன்களுக்கு இடம் அளித்து வளர்த்து வந்தார். அவரின் கருணை அறிந்து அவருடன் இருந்த நாய்களும் பூனைகளும் சண்டையிடவில்லை. அவருடன் இருந்த கிளியும் அந்த கழுகுடன் ஒற்றுமையாக இருந்தது என்றால் அவர் எவ்வாறு அந்த வாயில்லாத ஜீவன்களை வளர்த்து வந்தார் என்று நாங்கள் வியந்தோம்.

எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் அவர்களது நெருங்கிய நண்பர். திரு.ஜீ.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவர். திரு.H.ராமக்ருஷ்ணன், தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர், இவரின் சங்கீத ஆர்வலர். இவர் சங்கீதா (The Master Recording Company) மூலமாக “சங்கீதானந்தா என்ற பெயரில் திரு நாராயணன் அவர்களின் பாடல்களை ஒரு அருமையான ஒலி நாடா மூலம் பதிவு செய்துள்ளார். கீழ் கண்ட இணைய தளத்தின் மூலம் பெறலாம்/கேட்கலாம்.
திருவொற்றியூர் நாராயண நம்பூதிரி அவர்களின் மறைவு நம் எல்லோருக்கும், சங்கீத ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய இழப்பு. இவரது ஆன்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் இறைவனைப் ப்ரார்த்திப்போம்.

Wednesday, September 18, 2013

Shree Ramachandra Kripalu Bhajamana - Goswami Thulasidass

காசியில் கங்கையில் மூழ்கி விசுவநாதரை தரிசித்தபின் ஓயாமல் ராம நாம ஜபம் செய்தார் துளசிதாசர். இரவில் தசாஸ்வமேத கட்டிடத்தில் படிகட்டில் உட்கார்ந்து ராமாயணம் சொல்வார். ஸாதுக்களும் அறிஞர்களும் கூடிக் கேட்டனர். ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவருக்கு விஸ்வரூபம் எடுத்து காட்சி தந்தன.உள்ளத்தில் ஒரே ஏக்கம் ராமனைக் காணவேண்டும் என்பதே. மக்கள் ப்ரவசனத்தில் வரும் நிகழ்ச்சிகளை நேரே நடந்த்து போல் உண்ர்ந்து பாகாய் உருகினர். 
தினமும் சரீர சுத்திசெய்தபின் மீதியுள்ள ஜலத்தை ஆலமரத்தில் கொட்டிவிடுவார். அந்த மரத்தில் வசித்து வந்த, துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று அந்த நீரைக் குடித்து விவேகம் அடைந்த்து. அந்த ஆவி அவருக்கு உதவி செய்ய நினைத்து வினவ அவரது ஒரே எண்ணமான ராமனை தரிசிப்பது என்பதைக் கேட்டார். அது மிகவும் சுலபமாயிற்றே. தினமும் வரும் அனுமானைக் கேளுங்கள் என்றது. துளசிதாஸருக்கு அதிசயம் ஆச்சரியம். ஆவி தொடர்ந்து கூறியது. உடம்பெல்லாம் வெண்குஷ்டம் வந்தவர் போல் வரும் அவர் நீங்கள் வரும் முன்னரே வந்து, கதை முடிந்து ஜனங்கள் திரும்பும் போது ஒவ்வொருவரையும் வீழ்ந்து வணங்கி விட்டு கடைசியில் செல்வார். அவரைப் பிடித்தால் உன் ராமரைக் காணலாம் என்றது.
அன்று இரவு சொற்பொழிவு ஆரம்பத்திலேயே துளசிதாஸர் கவனித்து விட்டார். தலையில் முக்காடுபோட்டுக் கொண்டு கடைசி வரிசையில் உட்கார்ந்து ப்ரவசனத்தில் மூழ்கியிருந்தார். அன்று ப்ரசங்கம் சபரி ராமரைக் காண சபரி வருவோரிடமெல்லாம் வினவும் கட்டம். எல்லோரிடமும் வினவி புலம்புகிறாள் என்றும்  ராமா என்னை ஏமாற்றிவிடாதே. எனக்கு நீதான் கதி. வழி காட்டமாட்டாயா என்று கதறுகிறாள் என்றும்  சொல்லி துளஸிதாசரும் கதறிவிட்டு  மூர்ச்சை அடைந்துவிட்டார். இதனைக் கண்ணுற்ற அனைவரும் ராம ராம என்று கோஷம். இட்டனர். வெகு நேரம் கழித்து  கண்விழித்துப் பார்த்தால் கண் முன்னே அனுமான் உள்ளார். அவரது காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனி புத்திரா எனக்கு ராமனைக் காட்டமாட்டாயா என்று கதறுகிறார். வேறு வழியில்லாது அவரை தோளில் சுமந்து கொண்டு விடு விடு என்று நடந்து வெளியெ செல்லுகிறார். பொழுது விடிந்த்து துளஸிதாசரை கீழே இறக்கிவிட்டு, “இதுதான் சித்திர கூடம். இந்த இடத்திற்கு  ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அதோ பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராம ஜபம் செய்யும் ராம தரிசனம் கிடைக்கும் என்றார்.
அனுமான் மறைந்து விட்டார். துளஸிதாசர் ராம ஜபம் சொன்னாரே தவிர அவரது மனம் பல சந்தேகங்களுடன் ராம ஜபத்தை ஜபித்தது. ராமர் மரஉரி தரித்து வருவாரா? ரதத்தில் வருவாரா. பீதாம்பரம் அணிந்திருப்பாரா. இலக்குவனுடன் வருவாரா? அனுமன் பொய் சொல்கிறாரா? என்ற பல சிந்தனைகளுடன் ராம ஜபம் நடந்தது.
மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்று கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடி கொண்டிருக்கிறார். அப்பொழுது இரண்டு குதிரைகளில் இரண்டு ராஜாக்கள்  வந்து கொண்டிருந்தனர். தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள், கொண்டைமீது வெண்புறா இறகுகள். வேகமாய் வந்து சிரித்தபடி போய்விட்டனர். அவர்களைப்பார்த்த துளசிதாஸர் என் ராம லட்சுமணர்களுக்கு இவர்கள் ஈடாவாரா? என்று ராமனை த்யானித்தவாறே ராம நாமம் சொன்னார். சற்று நேரம் கழித்து அனுமன் வந்தார். ராம லட்சுமணர்களைப் பார்த்தீரா? உங்கள் முன் குதிரை சவாரி செய்து சென்றனரே?”
ஐயோ ஏமாந்து போனேனே என்று கதற ஆரம்பித்தார்.
ராமன் உம்மிஷ்டப்படி தான் வருவாரா என்ன? அவர் இஷ்டப்படி வரக் கூடாதா? என்று அனுமன் வினவினார்.
வாயுகுமாரா இன்னும் ஒரு முறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார்.
மந்தாகினி நதியில் நீராடி ராம ஜபம் செய்து அவர்களது வரவை எதிர்பாரும். ராமபிரான் உமக்கு அருளுவார் என்றார்.
மந்தாகினியில் குளித்து ராம ஜபம் செய்து கொண்டு ஆவலுடனும், பதட்ட்த்துடனும் இருந்தார். இரண்டு இளைஞர்கள் மந்தாகினி நதியில் ஸ்நானம் செய்து விட்டு இவரை நோக்கி வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். தலையில் புது சடை. முகத்தில் பத்து பதினைந்து நாள் தாடி மீசை..
ஸ்வாமி! கோபி சந்தனம் இருக்கிறதா? இருவரில் ஒருவர் கேட்கிறார்.
இருக்கிறதே. தருகிறேன் துளஸீதாசர் பதில்
ஸ்வாமி எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன்.
அன்று அம்மாவாசை தினம். கருப்பான பைய்யனின் மோவாயைப்  பிடித்து கோபீ சந்தனம் இடுகிறார். அவன் கண்களில் இருந்த ஒளி அவரை மெய் மறக்கச் செய்த்து. அந்த வாலிபன் அவர் கையிலிருந்த சந்தனத்தை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான்.
அவர்கள் உட்கார்ந்திருந்த துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி கூவி பேச ஆரம்பித்த்து.
சித்திர கூடகே காடாபரப இ ஸந்தந் கீ பீர
துளஸிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர
(சித்திரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளஸீதாஸர் சந்தனம் இழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்).
தாஸருக்கு சுயநினைவு வருகிறது. அவர்கள் இருவரையும் கட்டி அணைக்கிறார். மறுகணம் ராம் லட்சுமணர்களைக் காணோம்.
கிளி வடிவத்தில் வந்து ராம தர்சனத்தை உணர்த்தியவர் ஹனுமான்.
துளஸீதாஸர் தரையில் விழுந்து புரண்டு ஐயோ வந்தவர்களை சேவிக்கவில்லையே என்று அலற ஆரம்பித்தார்.
கவலைப்படாதே இனி உம்மை ராமன் விடமாட்டார். அவர் எப்படி இருந்தார் சொல்லும் பார்ப்போம் என்றார்.
துளஸீதாஸர் பாடினார்.
ஸ்ரீ ராம சந்த்ர க்ருபாளு பஜமன ஹரண பவ பய தாருணம்
நவ கஞ்ச லோசன, கஞ்ச முக, கர கஞ்ச பத கன்ஜாருணம்
கந்தர்ப அகணித அமித சபி நவ நீல நீரத ஸுந்தரம்
பட பீத மானோ  தடித ருசி சுசி நௌமி ஜனக ஸுதாவரம்
பஜ தீன பந்து தினேச தானவ தைத்ய வம்ச நிகந்தனம்
ரகு நந்த ஆனந்த கந்த கோஸல சந்த தசரத நந்தனம்
ஸிரமுகுட குண்டல திலக சாரு உதார அங்க விபூஷணம்
ஆஜானு புஜ சர சாப தர ஸங்ராம ஜித கர தூஷணம்
இதி வததி துளசிதாஸ சங்கர ஸேஷ முனி மன ரஞ்ஜனம்
மம ஹ்ருதய கஞ்ச நிவாஸ குரு காமாதி கல தல கஞ்ஜனம்
स्रिरामचन्द्र क्रुपालु भजु मन, हरण भव भय दारुण्
नवक्न्ज लोचन कन्ज मुख, कर कन्ज पद् कन्जारुण्
कन्द्र्प अगणित अमित छबि नव नील नीरद सुन्दरम
पट पीत मानहु तडित रुचिशुचि नौमि जनक सुता वरम
भजु दीनबनधु दिनेश दानव-दैत्य वम्श निकन्दनम्
रघुनन्द आनद कन्द कोसल चन्द दशरथ नन्दनम्
शिर मुकुट कुण्डल तिलक चारु उदार अन्ग विभुष्णम्
आजानु भुज शर चाप धर स्न्गाम जित खरदूषणम्
इति वदति तुलसीदास शन्कर शेष मुनिमन रन्जनम्
मम ह्रुदय कन्ज निवास कुरु कामादि खल दल गन्जम्


Sunday, September 1, 2013

Thiruppaavai - 24 - Andruiv_vulagam

திருப்பாவை-24 -அன்று இவ்வுலகம்
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

Tuesday, August 20, 2013

SAHASRA LINGAM

சிவ லிங்கங்களைப் பற்றிய தொகுப்பினை வலையில் படித்த போது, அருமையான பக்திக் கதை ஒன்றினைப் படித்தேன். எந்தப் பொருளினால் சிவலிங்கத்தை வடிதுள்ளார்களோ, அதனை வைத்து அந்த சிவலிங்கத்தினை அழைப்பர். தங்கம், மண், உலோகங்கள், வெண்ணை, மாவு, ஸ்படிகம் என்ற பொருள்களால் அமைந்திருந்தால், அதனைக் கொண்டு அந்த சிவ லிங்கத்தை வகைப்படுத்துவர். அவ்வாறாக 32 சிவ லிங்கங்கள் வழக்கத்தில் உள்ளன.
கந்த லிங்கம், புஷ்ப லிங்கம், கோசக்ரு லிங்கம், வலுக லிங்கம், யவகோதுமஸலிஜ லிங்கம், சிதகண்ட லிங்கம், லவண லிங்கம், திலபிஷ்ட லிங்கம், பம்ஸ லிங்கம், கூடலிங்கம், வம்சங்குர லிங்கம், பிஸ்த லிங்கம், தடிதுக்த லிங்கம், தான்ய லிங்கம், பாளலிங்கம், தாத்ரி லிங்கம், நவநீத லிங்கம், துர்வகடஜ லிங்கம், கற்பூர லிங்கம், அயஸ்கந்த லிங்கம், மௌக்டிக லிங்கம், ஸ்வர்ண லிங்கம், ரஜித லிங்கம், கம்ஸ்ய லிங்கம், த்ரபு லிங்கம், ஆயஸ லிங்கம், ஸீஸ லிங்கம், அஷ்டத்டு லிங்கம், அஷ்டலோக லிங்கம், வைடுர்ய லிங்கம், ஸ்படிக லிங்கம், பதர லிங்கம்.
ஒரு பெரிய லிங்கத்திற்குள் 999 லிங்கள் செதுக்கப்பட்டு அதனை பூஜித்தால், அதனை ஸஹஸ்ர லிங்கம் என்று அழைப்பர். இந்த லிங்கம் தோன்றிய விதத்தை லிங்கபுராண தொகுப்பினிலிருந்து அறிந்தேன்.
ராவணன், அவனது மனைவி மண்டோதரி இருவருமே சிவ பக்தர்கள்.  சிவபூஜையின் போது எப்பொழுதுமே புலித்தோல், சர்ப்பங்கள் என்பவைகளை அணிந்தே பார்த்து களைத்த மண்டோதரி சர்வ அலங்காரத்துடன் இருந்தால் எவ்வாறாக இருக்கும் என்று எண்ணினாள்.
ஒரு சமயம் உத்தரகோசமங்கை என்னும் க்ஷேத்திரத்தில் குருவாக அமர்ந்து ஆயிரம் முனிவர்களுக்கு  ஆகம விதிகளை (கோயில் பூஜை விதிமுறைகளை) கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவளது வேண்டுதலை அறிந்து சர்வ அலங்காரத்துடன் காட்சி தர எண்ணினார். முனிவர்களிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். தான் திரும்பிவரும் வரை ஆகம சுவடிகளை பாதுகாக்க அந்த 1000 முனிவர்களிடமும் பொறுப்பை ஒப்படைத்தார். முனிவர்கள் அவர் செல்வதை விரும்பவில்லை. ராவணன் ஒரு கொடிய அரக்கன். சாகாவரம் பெற்றவன். மானிடனால் மட்டுமே அழிக்கும் வரத்தை ப்ரும்மாவிடம் பெற்றிருந்ததால் சிவபெருமான் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. பிறப்பும் அழிவும் இல்லாத சிவன் அவர்களை அஞ்ச வேண்டாம். ராவணனும் சிவ பக்தன் தான் என்றார்.
ஒருவேளை தீங்கு ஏற்பட்டால், ஆதி கங்கையில் தீப்பிழம்பு தோன்றும். அப்பொழுது உரியதைச் செய்யுங்கள் என்று பணித்துச் சென்றார்.
மாயா என்ற யக்ஷனுக்கும் ஹேமா என்ற கந்தர்வ மங்கைக்கும் காட்டினிலே பிறந்த அதிசயக் குழந்தை மண்டோதரி ஆவாள். குழந்தை பிறந்தவுடன், யக்ஷன் யக்ஷலோகத்திற்குச் தாயையும் சேயையும் விட்டுப் பிரிந்து திரும்பிச் சென்றான். பிறந்த சிலநாட்களிலேயே பருவ வயதினை அடைந்த இந்த அதிசய யுவதியை மணக்க ஆசைப்பட்டு தாயின் சம்மதத்தைப் பெற்று காந்தர்வ முறையில் ராவணன் மணந்த யுவதியே மண்டோதரி ஆவாள்.
மண்டோதரி சிவபூஜை செய்து கொண்டிருந்தபொழுது, சிவபெருமான் அவளது விருப்பப்படி சர்வ அலங்காரத்துடன் ப்ரசன்னமானார். அவருக்குப் பாதபூஜை செய்தாள். அங்கு ராவணன் வருவதை அறிந்த சிவன், ஒரு பச்சிளங்குழந்தையாக மாறினார். குழந்தையின் பேரழகைக் கண்ட ராவணன், அந்தக் குழந்தையை எடுத்து மார்புடன் தழுவி மகிழ்ந்தான். அந்தக் குழந்தையைப் பற்றி வினவ அது ஒரு ரிஷிபத்தினியின் மகவு என்று உறைத்தாள். 
அப்போது லோகமாதா பார்வதி தேவி, ரிஷி பத்தினியாக வந்து குழந்தயை வாங்கிச் சென்றாள். ராவணன் குழந்தையைக் கையில் எடுத்ததுமே ஆதிகங்கை பொய்கையில் தீப்பிழம்பு தோன்றிற்று. சிவபெருமானுக்கு ஆபத்து என்று நினைத்து ஒருவர் பின் ஒருவராக தீயில் வரிசையாக முனிவர்கள் பாய்ந்தனர்.
ஒரே ஒரு முனிவர் மாத்திரம் சிவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஆகம சுவடிகளுடன் சிவனுக்காக காத்திருந்தார். அப்போது அங்கே சிவன் தோன்றி மாண்ட முனிவர்களை உயிருடன் எழுப்பி அவர்கள் 999 பேருடன், தாமும் ஒரு லிங்கமாக மாறி ஸஹஸ்ரலிங்கம் என பெயர் பெறுவதாகச் சொன்னார்.
வாக்கு தவறாமல் ஆகமங்களைப் பாதுகாத்த முனிவரை அடுத்த பிறவியில் பாண்டிய நாட்டில் மாணிக்க வாசகராய் பிறப்பித்து, தன் அடி வர சிவன் அருளியதாக சிவ புராணத்தில் உள்ளது.
அதன் காரணமாக திருவாசகம் என்னும் அறிய நூல் நமக்குக் கிடைத்தது

Monday, August 19, 2013

RUK - YAJUR UPAKARMA - 20.08.2013 - AVANI AVITTAM


ருக் யஜுர் உபாகர்மா ( செவ்வாய்க் கிழமை 20-08-2013)
ஆவணி அவிட்டம்
1. யக்ஞோபவீத தாரணம்
2. காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்
3. காண்டரிஷி தர்ப்பணம்
4. அத்யயன ஹோமமும் 
5.வேத ஆரம்பம்
காயத்ரீ ஜபம் (புதன் கிழமை 21-08-2013)
1. ஸ்ங்கல்பம்

2. 108 / 1008 காயத்ரி ஜபம்