காசியில் கங்கையில்
மூழ்கி விசுவநாதரை தரிசித்தபின் ஓயாமல் ராம நாம ஜபம் செய்தார் துளசிதாசர். இரவில்
தசாஸ்வமேத கட்டிடத்தில் படிகட்டில் உட்கார்ந்து ராமாயணம் சொல்வார். ஸாதுக்களும்
அறிஞர்களும் கூடிக் கேட்டனர். ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவருக்கு
விஸ்வரூபம் எடுத்து காட்சி தந்தன.உள்ளத்தில் ஒரே ஏக்கம் ராமனைக் காணவேண்டும்
என்பதே. மக்கள் ப்ரவசனத்தில் வரும் நிகழ்ச்சிகளை நேரே நடந்த்து போல் உண்ர்ந்து
பாகாய் உருகினர்.
தினமும் சரீர
சுத்திசெய்தபின் மீதியுள்ள ஜலத்தை ஆலமரத்தில் கொட்டிவிடுவார். அந்த மரத்தில்
வசித்து வந்த, துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று அந்த நீரைக் குடித்து விவேகம்
அடைந்த்து. அந்த ஆவி அவருக்கு உதவி செய்ய நினைத்து வினவ அவரது ஒரே எண்ணமான ராமனை தரிசிப்பது
என்பதைக் கேட்டார். அது மிகவும் சுலபமாயிற்றே. தினமும் வரும் அனுமானைக் கேளுங்கள்
என்றது. துளசிதாஸருக்கு அதிசயம் ஆச்சரியம். ஆவி தொடர்ந்து கூறியது. உடம்பெல்லாம்
வெண்குஷ்டம் வந்தவர் போல் வரும் அவர் நீங்கள் வரும் முன்னரே வந்து, கதை முடிந்து ஜனங்கள் திரும்பும் போது ஒவ்வொருவரையும் வீழ்ந்து
வணங்கி விட்டு கடைசியில் செல்வார். அவரைப் பிடித்தால் உன் ராமரைக் காணலாம் என்றது.
அன்று இரவு சொற்பொழிவு
ஆரம்பத்திலேயே துளசிதாஸர் கவனித்து விட்டார். தலையில் முக்காடுபோட்டுக் கொண்டு
கடைசி வரிசையில் உட்கார்ந்து ப்ரவசனத்தில் மூழ்கியிருந்தார். அன்று ப்ரசங்கம் சபரி
ராமரைக் காண சபரி வருவோரிடமெல்லாம் வினவும் கட்டம். எல்லோரிடமும் வினவி
புலம்புகிறாள் என்றும் ராமா என்னை
ஏமாற்றிவிடாதே. எனக்கு நீதான் கதி. வழி காட்டமாட்டாயா என்று கதறுகிறாள் என்றும் சொல்லி துளஸிதாசரும் கதறிவிட்டு மூர்ச்சை அடைந்துவிட்டார். இதனைக் கண்ணுற்ற அனைவரும் ராம ராம என்று
கோஷம். இட்டனர். வெகு நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தால் கண் முன்னே அனுமான்
உள்ளார். அவரது காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அஞ்சனி புத்திரா எனக்கு ராமனைக் காட்டமாட்டாயா என்று கதறுகிறார்.
வேறு வழியில்லாது அவரை தோளில் சுமந்து கொண்டு விடு விடு என்று நடந்து வெளியெ
செல்லுகிறார். பொழுது விடிந்த்து துளஸிதாசரை கீழே இறக்கிவிட்டு, “இதுதான் சித்திர கூடம். இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில்
வனவாசம் செய்த இடம். அதோ பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராம ஜபம் செய்யும்
ராம தரிசனம் கிடைக்கும் என்றார்.
அனுமான் மறைந்து
விட்டார். துளஸிதாசர் ராம ஜபம் சொன்னாரே தவிர அவரது மனம் பல சந்தேகங்களுடன் ராம
ஜபத்தை ஜபித்தது. ராமர் மரஉரி தரித்து வருவாரா? ரதத்தில் வருவாரா. பீதாம்பரம் அணிந்திருப்பாரா. இலக்குவனுடன்
வருவாரா? அனுமன்
பொய் சொல்கிறாரா? என்ற
பல சிந்தனைகளுடன் ராம ஜபம் நடந்தது.
மலைப்பாதை. ஒற்றையடிப்
பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்று கொண்டு ராம ராம
என்று நர்த்தனமாடி கொண்டிருக்கிறார். அப்பொழுது இரண்டு குதிரைகளில் இரண்டு
ராஜாக்கள் வந்து
கொண்டிருந்தனர். தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள், கொண்டைமீது வெண்புறா இறகுகள். வேகமாய் வந்து சிரித்தபடி
போய்விட்டனர். அவர்களைப்பார்த்த துளசிதாஸர் என் ராம லட்சுமணர்களுக்கு இவர்கள்
ஈடாவாரா? என்று
ராமனை த்யானித்தவாறே ராம நாமம் சொன்னார். சற்று நேரம் கழித்து அனுமன் வந்தார். “ராம லட்சுமணர்களைப் பார்த்தீரா? உங்கள் முன் குதிரை சவாரி செய்து சென்றனரே?”
“ஐயோ ஏமாந்து
போனேனே என்று கதற ஆரம்பித்தார்.
“ராமன்
உம்மிஷ்டப்படி தான் வருவாரா என்ன? அவர்
இஷ்டப்படி வரக் கூடாதா?” என்று அனுமன் வினவினார்.
“வாயுகுமாரா இன்னும் ஒரு
முறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்” என்றார்.
“மந்தாகினி நதியில் நீராடி
ராம ஜபம் செய்து அவர்களது வரவை எதிர்பாரும். ராமபிரான் உமக்கு அருளுவார்” என்றார்.
மந்தாகினியில் குளித்து
ராம ஜபம் செய்து கொண்டு ஆவலுடனும், பதட்ட்த்துடனும் இருந்தார். இரண்டு இளைஞர்கள் மந்தாகினி நதியில்
ஸ்நானம் செய்து விட்டு இவரை நோக்கி வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன்
தங்க நிறம். தலையில் புது சடை. முகத்தில் பத்து பதினைந்து நாள் தாடி மீசை..
“ஸ்வாமி!
கோபி சந்தனம் இருக்கிறதா? இருவரில்
ஒருவர் கேட்கிறார்.
“இருக்கிறதே.
தருகிறேன்” துளஸீதாசர் பதில்
“ஸ்வாமி எங்களிடம் கண்ணாடி
இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன்”.
அன்று அம்மாவாசை தினம்.
கருப்பான பைய்யனின் மோவாயைப் பிடித்து கோபீ சந்தனம்
இடுகிறார். அவன் கண்களில் இருந்த ஒளி அவரை மெய் மறக்கச் செய்த்து. அந்த வாலிபன்
அவர் கையிலிருந்த சந்தனத்தை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு
அவருடைய நெற்றியிலும் தீட்டினான்.
அவர்கள் உட்கார்ந்திருந்த
துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி கூவி பேச ஆரம்பித்த்து.
சித்திர கூடகே காடாபரப இ ஸந்தந் கீ பீர
துளஸிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர
(சித்திரக் கூடத்துக்
கரையில் சாதுக்கள் கூட்டம். துளஸீதாஸர் சந்தனம் இழைக்கிறார். ராமன்
திலகமிடுகிறார்).
தாஸருக்கு சுயநினைவு
வருகிறது. அவர்கள் இருவரையும் கட்டி அணைக்கிறார். மறுகணம் ராம் லட்சுமணர்களைக்
காணோம்.
கிளி வடிவத்தில் வந்து ராம
தர்சனத்தை உணர்த்தியவர் ஹனுமான்.
துளஸீதாஸர் தரையில் விழுந்து
புரண்டு “ஐயோ வந்தவர்களை சேவிக்கவில்லையே என்று அலற ஆரம்பித்தார்.
“கவலைப்படாதே இனி உம்மை
ராமன் விடமாட்டார். அவர் எப்படி இருந்தார் சொல்லும் பார்ப்போம்” என்றார்.
துளஸீதாஸர் பாடினார்.
ஸ்ரீ ராம
சந்த்ர க்ருபாளு பஜமன ஹரண பவ பய தாருணம்
நவ கஞ்ச
லோசன, கஞ்ச முக, கர கஞ்ச பத கன்ஜாருணம்
கந்தர்ப
அகணித அமித சபி நவ நீல நீரத ஸுந்தரம்
பட பீத மானோ தடித ருசி சுசி நௌமி ஜனக ஸுதாவரம்
பஜ தீன
பந்து தினேச தானவ தைத்ய வம்ச நிகந்தனம்
ரகு நந்த
ஆனந்த கந்த கோஸல சந்த தசரத நந்தனம்
ஸிரமுகுட
குண்டல திலக சாரு உதார அங்க விபூஷணம்
ஆஜானு புஜ
சர சாப தர ஸங்ராம ஜித கர தூஷணம்
இதி வததி
துளசிதாஸ சங்கர ஸேஷ முனி மன ரஞ்ஜனம்
மம ஹ்ருதய
கஞ்ச நிவாஸ குரு காமாதி கல தல கஞ்ஜனம்
स्रिरामचन्द्र क्रुपालु
भजु मन, हरण भव भय दारुण्
नवक्न्ज लोचन कन्ज मुख,
कर कन्ज पद् कन्जारुण्
कन्द्र्प अगणित अमित छबि
नव नील नीरद सुन्दरम
पट पीत मानहु तडित
रुचिशुचि नौमि जनक सुता वरम
भजु दीनबनधु दिनेश
दानव-दैत्य वम्श निकन्दनम्
रघुनन्द आनद कन्द कोसल
चन्द दशरथ नन्दनम्
शिर मुकुट कुण्डल तिलक
चारु उदार अन्ग विभुष्णम्
आजानु भुज शर चाप धर
स्न्गाम जित खरदूषणम्
इति वदति तुलसीदास शन्कर
शेष मुनिमन रन्जनम्
मम ह्रुदय कन्ज निवास
कुरु कामादि खल दल गन्जम्
No comments:
Post a Comment