திருவொற்றியூர் நாராயண நம்பூதிரி அவர்கள் 24 செப்டம்பர் 2013 அன்று
இறைவனடி சேர்ந்தார். இவரைப் பற்றி கூறும்போது நம் நினைவுக்கு வருவது அவரது
இனிமையான சங்கீதம், தைலதாரை போன்ற அவரது இனிமையான குரல் வளம், ஹார்மோனியத்துடன் இழைந்த
சங்கீதம், திரு GNB
அவர்களின் பல அபூர்வ ஸாஹித்யங்கள், இனிமையான பேச்சு, மற்றவர் மனதை புண்படுத்தாத
ஒரு மனதிற்கு இதமான உரையாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பிறர் ஆதரிக்காத தெரு நாய்கள், பூனைகள், சிறகு அடிபட்டு கீழே
விழுந்த கழுகு என்று பல வாயில்லாத ஜீவன்களுக்கு இடம் அளித்து வளர்த்து வந்தார். அவரின்
கருணை அறிந்து அவருடன் இருந்த நாய்களும் பூனைகளும் சண்டையிடவில்லை. அவருடன் இருந்த
கிளியும் அந்த கழுகுடன் ஒற்றுமையாக இருந்தது என்றால் அவர் எவ்வாறு அந்த வாயில்லாத
ஜீவன்களை வளர்த்து வந்தார் என்று நாங்கள் வியந்தோம்.
எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாராயண ஐயங்கார் அவர்களது
நெருங்கிய நண்பர். திரு.ஜீ.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் முக்கிய சிஷ்யர்களில்
ஒருவர். திரு.H.ராமக்ருஷ்ணன்,
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர், இவரின் சங்கீத ஆர்வலர். இவர் சங்கீதா (The Master Recording Company) மூலமாக “சங்கீதானந்தா” என்ற பெயரில் திரு நாராயணன்
அவர்களின் பாடல்களை ஒரு அருமையான ஒலி நாடா மூலம் பதிவு செய்துள்ளார். கீழ் கண்ட
இணைய தளத்தின் மூலம் பெறலாம்/கேட்கலாம்.
திருவொற்றியூர் நாராயண நம்பூதிரி அவர்களின் மறைவு நம்
எல்லோருக்கும், சங்கீத ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய இழப்பு. இவரது ஆன்மா சாந்தி
அடைய நாம் எல்லோரும் இறைவனைப் ப்ரார்த்திப்போம்.
No comments:
Post a Comment