நாராயண தீர்த்தர் தனது தரங்களில்
பல பாடல்களில் பல புராணங்களின் சாரத்தை பாடல் வடிவில் நமக்கு எளிய முறையில்
அளிக்கிறார். முன் செய்த பிறவியின் செய்த நற்பயனால் ஆயர்பாடியில் மங்கையாகப்
பிறந்த கோபிகை, கண்ணனை குறித்து நமஸ்காரம் செய்து இவ்வாறு கூறுவதாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
ராகம்
பிலஹரி தாளம் ஆதி
பல்லவி
பூரய
மம காமம் கோபாலா
அனுபல்லவி
வாரம்
வாரம் வந்தனமஸ்து தவ வாரிஜதளநயன
சரணங்கள்
1. மன்யேத்வாமிஹ
மாதவ தைவம்
மாயா
ஸ்வீக்ருத மானுஷ பாவம்
தன்யைராக்ருத
தத்வஸ்வபாவம்
தாதாரம்
ஜகதாமதிவிபவம்.
2. ப்ருந்தாவனசர
பர்ஹாவதம்ஸ
பக்த
குஞ்ஜவன பஹுதரவிலாஸ
ஸாந்த்ராநந்த
ஸமுத்கீர்ணஹாஸ
ஸங்கதகேயூர
ஸமுதிததாஸ
3. மத்ஸ்யகூர்மாதிதச
மஹிதாவதாரா
மதனுக்ரஹாதர
மதன கோபாலா
வாத்ஸல்யபாலித
வர யோகிப்ருந்த
வரநாரயணதீர்த்த
வர்த்திதமோத
துளஸியின் மேன்மை பத்ம புராணத்திலும்,
ஹரி பக்தி விலாஸ நூலிலும் கூறப்பட்டுள்ளன. அதன் சாரத்தை தரங்கிணியில் இந்த பாடலின்
இரண்டாவது சரணத்தின் மூலம் நினைவு படுத்திகிறார்.
இதன் மூலம் நாம் அறிந்த்து.
துளஸிச் செடியின்
v கீழ் பாகத்தில் கங்கை முதலான புண்யதீர்த்தங்கள் உள்ளன.
v நடுபாகத்தில் அனைத்து தெய்வங்கள் வாசம் பண்ணுகின்றன.
v மேல் பாகத்தில் எல்லா வேதங்களும் ஒலிக்கின்றன.
v ப்ருந்தாவனம் அனைவராலும் பூஜிக்கப் படுகின்றன.
v ப்ருந்தாவனம் உலகத்தையே தூய்மைப்படுத்துகிறது.
v இலை மலர்களுள் மிகச் சிறந்த்தாகும்.
துளஸிச் செடியினை / இலையினை
v ஒருவன் பார்த்தால் அவனது பாவக்குவியல்கள் அகலுகின்றன.
v தொட்டவன் உடல் தூய்மை அடைகிறது.
v வணங்கினால் பிணிகள் அகலுகின்றன.
v நீரை ஊற்றினால் யமபயம் அகலுகிறது
v வளர்த்தால் க்ருஷணரின் அருகாமையை அடைகிறோம்.
v க்ருஷ்ணரின் திருவடிகளில் சேர்த்தால் மோக்ஷத்தை
அளிக்கிறது.
v கார்த்திகை மாத முப்பது நாட்களில் துளஸியை நட்டு
வளர்க்கவோ, பார்க்கவோ, தொடவோ, த்யானிக்கவோ, வணங்கவோ, பூஜிக்கவோ செய்தால் ஒரு
யுகத்தில் செய்த பாவம் அகலுமாம்.
துளஸி இதழின் / இதழ்களால்
v நடுவில் கேசவனும்
v நுனியில் ப்ரம்மதேவனும்
v அடிகாம்பில் சிவபெருமானும் எப்போதும் இருக்கின்றார்கள்
v விஷ்ணுவையும், சிவனையும் பூஜித்தால் மோக்ஷத்தை
அடைகிறான்.
v தானம் செய்தால் பித்ருக்களுக்கு அக்ஷய த்ருப்தியை
அளிக்கும். கயா சிராத்த பயனைக் காட்டிலும் அதிக மடங்கு பலன் அளிக்கும்.
No comments:
Post a Comment