20வது அஷ்டபதி
ஸுசிரம் அனுநயனே ப்ரீணயித்வா
ம்ருகாக்ஷீம்
கதவதி க்ருதவேஷ கேஸவே குஞ்ஜ
ஸய்யாம்
ரசித ருசிர பூஷாம் த்ருஷ்டி
மோக்ஷே ப்ரதோஷே
ஸ்புரதி நிரவஸாதாம் காபி
ராதாம் ஜகாத
இந்த அஷ்டபதியை ஆரம்பிக்கும் பொழுது, நாடக பாணியில் ஒரு முன்னுறையாக இரவின்
வருகையையும், ராதையின் அலங்காரத்தையும் விவரித்து, சிறிது காலம் பிரிந்த ராதையும்
க்ருஷ்ணனும் எவ்வாறு பிரிவை விடை கொடுத்து அனுப்புகிறார்கள் என்பதே சாரம்.
இது வஸந்த ராகத்தில் யதி தாளத்தில் பாடப் படவேண்டுமென்று மூலக்ரந்தத்தில்
சொல்லப்பட்டதாக 1940ல் ப்ரஸுரித்த ஒரு சுவடி ரூபத்தில் உள்ள புத்தகத்தில் உள்ளது.
மேலும் அந்த புத்தகத்தில் உள்ள சாரம்சம் பின்வருமாறு:
இந்த அஷ்டபதியுடன் முடிவடையும் “ஸ்ரீஹரிதாள ராஜி ஜலதர விலஸித”மென்ற 20வது ப்ரபந்தத்தின் லக்ஷண ஸ்லோகத்தில் இதற்கு நந்தமென்ற
ராகம் ஏற்படுத்தியிருக்கிறது. தாளங்கள் முறையே ஆதி, ப்ரதிமண்டம், சதுர்மாத்ர
மண்டம், அட்டம், வர்ணயதி, நவமாத்ரா மண்டம், நிஸ்ஸாரு, ஜம்பை, த்ருதமண்டம், ரூபகம்,
ப்ரதிதாளம், த்ரிபுட, ஏகதாளி என்று காணப்படுகிறது. கரஹளி, துண்டகிளி, புக்தா,
கொம்பு (ஸ்ருங்கம்), சங்கு(சங்கம்), படஹம், ஹுடுக்கம், முரஜம், கரடா, ருண்டா,
டமரு, டக்கா, பாடாவென்ற வாத்யங்களில் வாசிக்கப்படவேண்டும்.
எங்கள் குருநாதர் பஜனை ஸம்ப்ரதாயத்தில் பாடியபடி நான் பாடியுள்ளேன். இத்தனை
வாத்யங்களை சொல்லியிருப்பதால், ஒரு மாதிரிக்கு, கேரள செண்டை வாத்யத்தின் ஒலிப்
பதிவினை ஒரு குறுந்தகடு வாயிலாக சேர்த்து, அந்த லயத்திற்கு தகுந்தார்போல்
பாடியுள்ளேன். இந்த முயற்சியில் ஸ்ருதி, தாள பேதங்கள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
No comments:
Post a Comment