Friday, December 4, 2009

ராமநாம மகிமை



வீரமணி என்ற அரசன் சிறந்த சிவ பக்தன். மிகுந்த பலசாலி. சிவன் அவனுக்கு நேரே காட்சி தருவதுண்டு. ராமர் அஸ்வமேத யாகம் செய்யும் தருணத்தில் யாகத்தில் விடப்பட்ட குதிரையை எல்லா தேசங்களிலும் பவனி வந்தபோது அனைத்து அரசர்களும் அதை வணங்கினார்கள். அனால் வீரமணி பணிய மறுத்தான்.  குதிரையுடன் வந்த பரதன்,சத்ருக்னன், ஆஞ்சநேயர் என அனைவரையும் எதிர்த்தான். மற்றவர்கள் மூர்சையாகிவிழுந்தபோது ஆஞ்சநேயர் வீரமணியை எதிர்த்து போராடி விரட்டி அடித்தார். வீரமணி பரமசிவனையே அழைத்து வந்து அனுமனிடம் போரிடச்செய்தான். அனுமன் ராம நாமத்தையே துணையாகக் கொண்டதால் ஈஸ்வரனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. முடிவில் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று ஈஸ்வரன் கேட்க அனுமன் "கீழே மூர்ச்சையாகிக் கிடக்கும் உடல்களை பாதுகாத்துக் கொண்டிருங்கள்.  நான் சஞ்சீவி பர்வதத்தை கொண்டுவருகிறேன் என்றார். சிவன் சிரித்துவிட்டு உன்னிடம் உள்ள ராம நாமத்தினாலேயே இவர்களை எழுப்பலாமே என்றார். அனுமன் வெட்கித் தலை குனிந்தார்.
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
 
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே 
 ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால்"  - கம்பர் 

No comments:

Post a Comment