Monday, December 7, 2009

என்னுடைய சங்கீத குருநாதர்

அன்றொரு நாள் காலைப் பொழுது துளசிங்கப் பெருமாள் கோயில் முட்டு சந்திற்கு எதிரே உள்ள வீட்டின் கூடத்தில் சிறியவரும் பெரியவ்ருமாக இருபது பேர் நெருக்கி உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தனர். சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதன் அனுபவித்து இசையை போதிக்க சிஷ்யர்கள் மனம் உருகி அந்த இசையை பயின்று கொண்டிருந்தனர்.  அதன் நடுவே ஒரு சத்தம். பட பட பட பட .... கட கட கட கட .....அங்கு அருகே உள்ள மாடிப் படியில் ஒரு பிளாஸ்டிக் குவளை உருண்டு வந்தது. உடனே அங்கிருந்த ஒரு வயலின் விதுஷியை "இது என்ன தாளம்" என்று வினவி ஒரு குழந்தைத்தனமான ஒரு சிரிப்பு.  மற்றொரு குழந்தை உள்ளே வருகிறாள். உனக்கு இன்று என்ன சொல்லித் தரவேணும் என்று வினவ அந்தக் குழந்தை நெளிந்துகொண்டே சண்டை வரிசை. உடனே அவர் "யாருடன் சண்டை?" உடனே கொல் என்று ஒரு சிரிப்பு. மாஸ்டர் அவர்களும் ஒரு சிரிப்பு.  இன்று எல்லோரும் கல்யாணி ராகத்தில் ஜண்டை வரிசையை பாடலாம். ஆல் இந்தியா ரேடியோவில் பாடும் எ கிளாஸ் பாட்டு விதுஷிகியும் எங்களுடனும் அந்த குழந்தையுடனும்  பாடுகிறார்கள்.
கேட்பதற்கு ரம்யமான பாட்டு. பார்பதற்கு அதை விட ரம்யமான காட்சி. அனுபவிக்க ஒரு தெய்வீகமான ஒரு சூழ்நிலை . ஆஹா இந்த நிகழ்வு இனிமேல் கிடைக்குமா.
அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை நமக்கு அவரது பெண் கீதா பென்னெட் அவர்கள்  கல்கியில் அளித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்

2 comments:

  1. I think he has subtly shown the importance of the Sarali varisai, Janda varisai and the other basics by making everybody sing / play.

    Probably, he was not like a traditional guru in being much more approachable. What do you think ?

    ReplyDelete
  2. Dear Vats
    See the blow link.
    Chingan
    http://www.chennaionline.com/video/index.aspx?vid=1660&src=hp

    ReplyDelete