Tuesday, April 23, 2013

MAANDAVA RISHI became AANI MAANDAVAR


ஆனிமாண்டவரும் தர்மதேவதையும்
நான் சிறுவனாக இருந்த போது, எனது தாய் தும்பி போன்ற சிறு பூச்சிகளை நான் துன்புருத்தாமல் இருப்பதற்காக “ஆனி மாண்டவர் என்ற ஒரு ரிஷி மஹானைப்பற்றிய ஒரு ஸ்வாரஸ்யமான பத்ம புரணாக் கதைத் தொகுப்பினைச் சொல்லுவார்கள்.
மாண்டவ ரிஷி சிறு வயதில் செய்த தவற்றினால், கழுவில் ஏற்றப்பட்டார் என்ற ஒரு செய்தியைச் சொன்னார். அதன் பின்னணியில் உள்ள வ்ருத்தாந்தத்தை இன்று அறிந்தேன். அதனை உங்களுக்கும் தெரிவிக்கிறேன். இதனை முன் அறிந்தவர்கள் இந்தச் செய்தியில் ஏதேனும் பிழை இருந்தால் சொல்லலாம். அதனைச் சரி செய்து கொள்கிறேன்.
நாம் அறிந்தது 18 புராணங்கள். உடலின் கூற்றுகளை இந்த 18 புராணங்களின் உருவகமாகக் கூறுவது ஒரு பண்டைய வழக்கம்
ப்ரஹ்ம புராணம் – முன் நெற்றி
பத்ம புராணம் - இதயம்
விஷ்ணு புராணம் – வலது புஜம்
சிவ புராணம் – இடது புஜம்
ஸ்ரீமத்பாகவத புராணம் – இரண்டு நேத்ரங்கள்
நாரத புராணம் – நாபி
மார்கண்டேய புராணம் – வலது கால்
அக்னி புராணம் - இடது கால்
பவிஷ்ய புராணம் – வலது முட்டிக்கால்
ப்ரஹ்மவைவாரி புராணம் – இட்து முட்டிக்கால்
லிங்க புராணம் – வலது கணுக்கால்
வாராஹ புராணம் – இட்து கணுக்கால்
வாமன புராணம் – ரோமம்
கூர்ம புராணம் – சருமம்
மத்ஸ்ய புராணம் – வயிறு
கருட புராணம் – ம்ஞ்சையும் கொழுப்பும்
ப்ரஹ்மாண்ட புராணம் – எலும்பு
 பத்ம புராணக் கதைத் தொகுப்பில் வருவது மாண்டவ மகரிஷியின் சரித்திரம். மாண்டவ மகரிஷி, வசிஷ்டருக்கு சமமான நிலை தனக்கு வருவதற்காக ஒரு தவயோகத்தைக் கையாளுகிறார். கடவுளை அடைய தவம் இருக்கலாம். ஆனால் ஒருவர் போல் மற்றொறுவர் வர வேண்டும் என்ற பேராசை ரிஷிகளிடம் இருக்கக் கூடாத ஒரு நிலை. 
ப்ரஹ்ம தேவதையின், அம்சம் மஹாபாரத சமயத்திற்கு உதவ வரவேண்டும். அதே சமயம் மாண்டவரின் தப வலிமை வசிஷ்டரின் நிலைக்குச் சமமாக வருவதற்கு உதவாமல் அந்த வலிமை பூலோகத்திற்கு விதுரனாகவும், தர்மபுத்திரனாகவும் வருவதற்கான ஒரு சந்தர்பம் கிடைக்க வேண்டும். அதற்காக தரும தேவதை ஒரு சிறிய நாடகத்தை உண்டு பண்ணுகிறார்.

ஒருசமயம் கள்வர்கள் அரண்மனையில் உள்ள பொருள்களை களவாடியவனுடன், சிப்பாயகள் துரத்த, மாண்டவய்யர் பர்ணசாலையில் புகுந்து கொள்கின்றனர். சிப்பாய்கள், கள்வர்களுடன் மாண்டவர்யையும் அழைகின்றனர். பதில் சொல்லாததால் அவரைத் தூக்கிக் கொண்டுவந்து அரசன் முன் நிறுத்துகின்றனர். அப்பொழுதும் அவர் தவம் கலையாததால் அவரால் பதில் கூறமுடியவில்லை. அரசன் அவரையும் கள்வன் என்று நினைத்து கழுவில் ஏற்ற கட்டளையிடுகிறான். மற்ற கள்வர்கள் அன்று இரவு இறந்துவிடுகிறார்கள். நிசி வேளையில் ரிஷிக்கு நினைவு திரும்புகிறது. அன்று இரவு மற்றொறு நிகழ்வும் நடக்கிறது.

ப்ரதிஷ்டானபுரம் என்று அழைக்கப்படும் அந்த பட்டிணத்தில், கௌசிகன் ஷைய்வ்யா என்ற ப்ரஹமண தம்பதியனர் இருந்தனர். ஷைய்வ்யா நளாயினி போன்ற பதிவ்ருதை. குஷ்டரோகத்தில் பீடித்திருந்த தனது கணவனின் வினோத ஆசையை நிறைவேற்ற ஒரு தாசியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றாள். அச்சமயம் இருட்டில், கௌசிகனது கால், மாண்டவரது சூலத்தில் இடிபட, அவர் வேதனையில், கௌசிகன் சூரிய உதயத்திற்குள் இறப்பான் என்று சாபமிட்டார். தெரியாமல் செய்த தவற்றுக்கு இந்த சாபத்தை இட்டதால் வெகுண்ட பதிவ்ருதை சூரியோதயம் நிகழாமல் செய்துவிட்டாள். தேவர்கள் வந்து அவளை சமாதனம் செய்து, முதலில் சூரிய உதயம் நிகழச்செய்து, பின்பு இறந்த கௌசிகனை உயிர் பெறச் செய்கின்றனர். அவர்கள் இருவரும் ஸ்வர்கம் செல்லுகிறார்கள். இதைக் கண்ணுற்ற மாண்டவர் தர்மராஜனை வருவித்து, தனக்கு நேர்ந்த இந்த அவலத்திற்கு காரணம் கேட்டார். அவரும் சிறு வயதில் செய்த தவற்றினை உணர இந்த தண்டனை என்று சொல்ல, மாண்டவர் வெகுண்டு சாபம் இடுகிறார். விவரம் தெரியாத வையதினில் செய்யும் தவறுகள் தாய் தந்தையரைத் தான் சேரும் என்ற வழக்த்துக்கு மாறாக தன்னை தண்டித்ததால் யமதர்மராஜனை தாசியின் வயிற்றில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். முதலின் கௌசிகனையும் பின்பு யமதர்மராஜனையும் சபித்ததால் அவர் யோக பலன்களை இழந்தார். தர்மராஜன் நினைத்தது எல்லாமே இனிதே நடந்து முடிந்தது. மாண்டவரும் தனது அறியாமையை நினைந்து வெட்கமுற்று, பகவானை த்யானிக்கச் சென்றார். மஹாபாரதம் என்ற இதிஹாசம் உருவாக இவரும் ஒரு காரணகர்த்தாவாக் திகழ்ந்தார்.

No comments:

Post a Comment