க்ருஷ்ணாவதார
காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள
ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள். கம்ஸனின் வண்ணான் க்ருஷ்ணரை
தூஷித்து நல்ல ஸாயுஜ்யம் அடைந்தான். இது ஒரு நிந்தாஸ்துதி. கூன்முதுகுடன்
அவலக்ஷணமான குப்ஜை என்பவள், கம்ஸனுக்கு சந்தனம் அரைத்துத்தரும் பணிப்பெண், எப்பொழுதும்
க்ருஷ்ணனை த்யானித்து, மனதளவில் க்ருஷ்ணனுக்கு தாஸியா இருக்க வேண்டி இருந்தவளுக்கு,
எல்லோரும் போற்றும் வண்ணம் அழகியாக மாற்றி ஆட்கொண்டார். மற்றுமொறு பிறவி
இருந்தாலும் நான் உனது தாஸியாகதான் இருக்க வேண்டும் என்று விரும்பியதன் பயன்,
கலியில் ஜனாபாயாக வந்து அவளை பண்டரிபுரம் விட்டலன் தடுத்தாட் கொண்ட இந்த சரிதம்
கி.பி.1263ம் ஆண்டு தொடர்ந்த்து.
மஹாராஷ்டிர
மாநிலத்தில் மகளிர் ஸந்யாஸிகளில் முதன்மையாகப் பேசப்படுபவர். கிராமங்களில் இன்றும்
மாவு அறைக்கும்போதும், வீட்டு வேலை செய்யும் பொழுதும் தங்களது வேலைச் சுமையை
மறந்து பாடும் பாட்டுகள் ஜனாபாயின் பாடல்கள்.
ஞானேஸ்வர்,
நாம்தேவ், ஏகநாத், துக்காரம் இவர்கள் வரிசையில் ஜனாபாயும் ஒரு முக்கிய இடம்
வகிப்பவர். வர்காரி என்ற பிரிவில உள்ள ஜனங்கள் அவர்களுடன் ஜனாபாயை சேர்த்து
பெருமையாகப் பேசுவர்.
கோதாவரி
நதிக்கரையில் அமைந்த கங்காகெட் என்ற குக்கிராமத்தில் மிகவும் எளிமையான குலத்தில்
பிறந்தவர். கடவுளுக்குத் தொண்டு புரியும் மனிதர்களுக்கு தொண்டு செய்வதை ஒரு
உன்னதமாகக் கருதும் தாமா-கருண்டா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். இவர்கள்
மூவரும் பண்டரிபுரம் விட்டலனுக்கு சேவை செய்வதை தங்களது மூச்சாக எண்ணியவர்கள்.
தாய் கருண்டா இறந்தபின், தந்தை தாமா, ஜனாபாயை தாமாசேத் ஷிம்பி என்பரின் வீட்டில்
வேலை செய்யும் பணிப்பெண்ணாகச் சேர்த்தார். ஷிம்பியின் மகன் நாம்தேவ், விட்டலனின்
பரம பக்தன். ஜனாபாயோ அவர்களுக்கு சேவை செய்வதில் தனது முழுமனதையும் செலுத்தி
இறைவனைக் கண்டவள்.
“தலித கண்டித துஸா காயீன் அனந்த”
மாவு அரைக்கும் பொழுதும்,
குத்துவதும் போதும் உன் நாமத்தைத் தவிர மற்றவற்றை பேசேன் என்பது அவளது குறிக்கோள்.
அவள் இயற்றிய அபங்கம் “விட்டுமாச்சா லெங்குரவாளா ஸாங்கே கோபாலான்சா மேளா” எல்லோராலும் இசைத்துப்
பாடப்படும் முக்கிய அபங்கமாகும். மிகவும் எளிய முறையில் மராத்தி மொழியில் பாமர
ஜன்ங்களும் பாடும் பாட்டாக அமைந்துள்ளது. முன்னூறுக்கும் மேற்பட்ட அபங்கங்கள்
நம்மிடையே பாடப்பட்டு வருகிறது.
ஒரு சமயம் பண்டரிநாத விட்டலன் தனது கோவிலுக்குள் தனிமையாக உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு வந்த ஞானேஸ்வரர் வருவதைப் பார்த்துவிட்டு தான் எழுதிய ஓலைச்சுவடியையும், எழுத்தாணியையும் தன் ஆசனத்தின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டார். இந்த பக்தனைப் பார்த்து ஆண்டவனே ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று நினைந்து, விட்டலனை வினவுகிறார். “ப்ரபோ ஏன் இந்த திருட்டுத்தனம் உம்மிடத்தில்” என்று உரிமையாகக் கேட்கிறார். “எந்த ருக்மிணிக்குப் பத்திரம் எழுதுகிறீர்” என்றார்.
ஒரு சமயம் பண்டரிநாத விட்டலன் தனது கோவிலுக்குள் தனிமையாக உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு வந்த ஞானேஸ்வரர் வருவதைப் பார்த்துவிட்டு தான் எழுதிய ஓலைச்சுவடியையும், எழுத்தாணியையும் தன் ஆசனத்தின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டார். இந்த பக்தனைப் பார்த்து ஆண்டவனே ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று நினைந்து, விட்டலனை வினவுகிறார். “ப்ரபோ ஏன் இந்த திருட்டுத்தனம் உம்மிடத்தில்” என்று உரிமையாகக் கேட்கிறார். “எந்த ருக்மிணிக்குப் பத்திரம் எழுதுகிறீர்” என்றார்.
“இது ஜனாபாயின் பாடல்கள்.
அதனை எழுதிவைத்துக் கொண்டு பாடுகிறேன்” என்றார். “நீர் ஏன்
எழுதுவானேன்” என்றார் ஞானேஸ்வர். “அவள் எப்பொழுதும் நாமதேவருக்கு கைங்கர்யம்
செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் என்னை மனதில் கொண்டு இந்த அருமையான பாடல்களைப்
பாடுகிறாள். அவளுக்கு இதனை எழுத அவகாசம் இல்லை. அதனால் தான் நான் எழுதிவைத்து,
அதனைப் பாடி மகிழ்கிறேன்” என்றார். “ருக்மணி தொடங்கி பத்ரா வரை எட்டு பட்டமகிஷிகள். மேலும்
ஒரு ராதை. மற்றும் எண்ணிலடங்கா அப்ஸர ஸ்த்ரீகளான கோபிகைகள் என்று பெரிய சமூகம் உன்னை
ஆராதிக்கும் பொழுது, இவளிடம் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை, அனுதாபம், காதல்” என்று கேட்கிறார்.
“அன்பரே! அவளுக்கும்
எனக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. ஜன்ம ஜன்மமாய் வந்தது. அவள் என்னுடைய நித்ய
தாஸி. க்ருஷ்ணாவதாரத்தில் குப்ஜையாக் இருந்தபோது அவளுக்குக் கொடுத்த வாக்கைக்
காப்பாற்ற இங்கு வந்துள்ளேன்” என்றார்.
இதைக் கேட்டதும் ஞானேஸ்வர்
கண்ணீர் மல்கி விட்டலனுடன் அவளையும் சேர்த்து ஆராதிக்கிறார். ஆனால் தனது விட்டலன் தன்னிடமிருந்து
விலகி இருப்பதாக ஓரத்தில் ஒரு தாபம்.
ஒரு சமயம் ஜனாபாய்
தட்டிப் போட்டிருந்த வறட்டிகளை பக்கத்து வீட்டுப் பெண் திருடிக் கொண்டு
போய்விட்டாள். ஜனாவிற்கு துக்கம் தாளவில்லை. பரமபாகவதர் வீட்டுக்கென்று தட்டிய
வறட்டியை லௌகீகர்கள் கொண்டு போய்விட்டனரே என்று புலம்பினாள். அதற்கு பாகவதர்கள்
போனால் போகட்டும் என்றனர். அனால் அவள் விடுவதாய் இல்லை. ஒவ்வொரு வறட்டியையும்
நான்விட்டலநாமா கீர்த்தனத்துடன் அல்லவா தட்டியுள்ளேம் என்றாள். உடனே பாகவதர்களும்
அடுத்த வீட்டுக்குப் போய் அங்குள்ள உன் வறட்டிகளைப் பொறுக்கியெடுத்துக்கொள்
என்றனர். ஒவ்வொறு வறட்டியாக தட்டிப் பார்த்து எது “விட்டல்” என்ற நாம கோஷத்தோடு
இருந்ததோ அதனை மட்டும் பொறுக்கி எடுத்துவந்தாள். அவள் பாடிய விட்டல நாமத்தை நானும்
பாட இசைந்தேன். முடிந்தவரை பாடியுள்ளேன். விட்டலனின் அருள் கிடைக்கப்
ப்ரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment