நடக்கத் தெரிந்த குழந்தை தவழக்
கற்றுக் கொண்டதாம், தாய் செய்த தவத்தாலே. இது ஒரு பழய பழமொழி. நடக்க ஆரம்பிக்கும்
பருவத்தில் குழந்தை ஒன்று இருக்கும்போது, அந்தத் தாய்க்கு இன்னொரு குழந்தை பிறந்ததாம்.
புதிதாகப் பிறந்தக் குழந்தையை எல்லோரும் அள்ளி எடுத்துக் கொஞ்சும் போது, தாய் அதனை
எடுத்து அரவணைத்து பாலூட்டுவதையும் முதல் குழந்தை பார்க்கிறது.
அந்த அன்பிற்கு
ஏங்கி இதுவும் அழுது அடம் பிடித்து தனது நடவடிக்கைகளை மாற்றி அவளது கவனத்தை தன்
பால் ஈர்க்கப் பார்ப்பது போல, நம்மிடையே பலர் இவ்வாறு நடப்பது இயல்பு. எல்லோருடைய வாழ்க்கையுமே முதல் இடத்தை நோக்கி
நகர்வதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். இதனால் தான் ப்ரச்சனை உருவாகிறது. அதில்
ஒரு ப்ரச்சனை தான் நம் ஆரோக்யத்தை நாமே பாழ்படுத்திக் கொள்வது.
நம்மில் ஒருவருக்கு ஒரு சின்ன உடல்
உபாதை வருகிறது. உடனே நம் வீட்டில் உள்ளோர் நம்மை நன்கு கவனிக்கின்றனர். நம்
அலுவலகத்திலும் அந்த சமயம் நமக்கு உதவுகின்றனர். இந்த அதீத கவனிப்பு
குறைந்துவிடுமோ என்று அஞ்சி நம்மில் பலர் “ஏதோ பரவாயில்லை. இன்னும் பூரண குணம்
அடையவில்லை என்ற ஒரு பொய்யைச் சொல்லி மற்றவர் கவனத்தை ஈர்த்து நம் உடல் நலனை
இன்னும் கெடுத்துக் கொள்கிறோம்.
திருடன் ஒருவன் திருடப்போன இடத்தில்
மாட்டிக்கொள்ள, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறான். ஒரிட்ததில் சிலர் குளிர்காய
மூட்டிய அடுப்பு அணைந்து சாம்பல் குவியலாக் இருக்கிறது. ஓடினவன் அந்த சாம்பலை உடல்
முழுவதும் பூசி, அந்த மரத்தடியில் உட்கார்ந்து ஒரு முனிவரைப் போல சிவநாமம் சொல்லி
மனதில் நடுங்கிய வண்ணம் உட்கார்ந்தான். தேடி வந்தவர்கள் இவனை நிஜ சாமியார் என்று
நினைத்து விட்டு விட்டனர். அங்கிருந்து போக பயந்து மறுநாள் காலை வரை அதே போல்
நடித்தான். மன நிம்மதி கிடைத்தது. ஒரு சிவனடியாருக்கான ஒரு மரியாதை கிடைத்தது.
பிறகு நிஜமான அடியாராக மாறிவிட்டான்.
திருடனின் தவறான பாதை திசை மாறக்
காரணம் அவனது மனம். அதே மனம் தான் பூரண குணம் அடைந்தவன் பிறர் கவனத்தை ஈர்க்க உடல்
நலனை கெடுத்துக் கொள்கிறான். அதுவும் அதே மனம் செய்யும் தவறு. நாம் எதைத் தொடர்ந்து நினைக்கிறோமோ
நாம் அதுவாக மாறி விடுகிறோம்.
நம் மனதே ஒரு நல்ல மருந்து. நம்
உடலே நம்மை காப்பாற்றி நம்மை சரி செய்து கொள்கிறது. எனது நண்பர் ஒருவர், அறுபது
வயதைத்தாண்டியவர், இதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளவர், அதற்கான அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்துக் கேட்கச் சென்றவரை பெரிய
மருத்துவமனையில் அவரை வலுக்கட்டாயமாக அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மற்றுமொறு
நல்ல நாள் பார்த்து வருகிறேன் என்று வெளியே தப்பி வந்து, ஹெக்டேயிடம் சென்று
மாற்று சிகிச்சை பெற்று நலம் பெற்று வருகிறார். மனதில் உறுதி வேண்டும். நல்ல மனம்,
சஞ்சலமற்ற மனம் நம்மை நல் வழிக்குக் கொண்டு செல்லும்.
No comments:
Post a Comment