21வது
அஷ்டபதி
மஞ்ஜுதர குஞ்ஜதள கேளி ஸதனே
இந்த அஷ்டபதி கண்டா
ராகத்தில் அமைந்துள்ளது. நான் சிறு ப்ராயம் முதல் பல பஜனைகளில் கேட்டவிதம் ஆஹிரி
கலந்த கண்டா. பல புத்தகங்களை படித்துப்பார்த்ததில் குழப்பம் அதிகரித்ததே தவிர ஒரு
தெளிவு கிடைக்கவில்லை. திரு. TRS அவர்கள் Music Academyல் நடத்திய உரையாடலின் சாராம்சத்தை ஒரு பத்திரிகையில் படித்தேன். அது
பின் வருமாறு:
Mr.T.R.Subramanian was
also hugely impressed by the high level of attainment of the galaxy of
musicians/ musicologists who had gathered at the Music Academy to listen to
him. He also got a taste of the rare pleasure of listening to comments by
members of the expert committee, when Prof. TR Subramaniam rose to repeat
Ravikiran’s comments, apparently not having heard the Chitravina maestro.
(Ravikiran cited the example of the raga Ghanta as a compound of numerous ragas
like Todi, Dhanyasi and so on, responding to Deepak Raja’s question whether
compounds of more than 4 or 5 ragas could hold their own as independent
entities).
TRS also repeated a delightful anecdote he related last year
after S Sowmya’s lec-dem on the raga Ghanta. According to the story,
TRS’s course mate at the Music College, Sri.Ramnad Krishnan once said that
Ghanta was nothing but Dhanyasi sung imperfectly. To TRS’s query on how to sing
Dhanyasi wrongly, Krishnan gave a tongue-in-cheek reply again: “Is it difficult
for us musicians to get a raga wrong?”
திரு.திருவனந்தபுரம் வெங்கடராம பாகவதர் ஒரு அபூர்வ வீணை
வித்வான். ஆல் இந்தியா ரேடியோ நிலையத்தில் “A TOP“ வீணை வித்வானாக விளங்கும் இவர் திரு. K.S.நாராயணஸ்வாமி அவர்களின் ப்ரதம சிஷ்யர். திரு
வெங்கடராமன் அவர்கள், திரு.ரமணி அவர்கள், திரு லால்குடி ஜயராமன் அவர்கள் வீணா,
வேணு, வயலினில் முதன் முதலில் இசைத்
தட்டுகளை வெளியிட்டனர். திரு வெங்கடராமனின் ப்ரதம சிஷ்யை, வீணை விதூஷி
திருமதி.சேஷா நம்பிராஜன், Tirunelveli
AIR நிலய வீணை வித்வானாக (B ) பரிமளிக்கிறார். கர்நாடக சங்கீதத்தில்
தேர்ச்சிபெற்ற இவர் ஏணி போல் பல வித்வான்களையும், மேடைப் பாடகர்களையும் உருவாக்கி
மகிழும் ஒரு உன்னத கலைஞர். தேர்ச்சி பெற்ற இவரை அணுகி இந்த ராகத்தில் பாடுவதற்கு
உதவி நாடினேன். அவர் எனக்கு, பல புத்தகங்களிலிருந்து கண்டா ராகத்திற்கான குறிப்புகளை
எடுத்து அனுப்பியுள்ளார். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்தப் பாடலைப்
பாடினதில் குறைகள் ஏதாவது இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. பாராட்டுதலை மனது
நிறைவுடன் எனக்கு உதவியவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
No comments:
Post a Comment