செங்கழுநீர்
வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;
செங்கல்
பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள்
திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம்
எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!
எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு
சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக்
கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
No comments:
Post a Comment