Tuesday, January 8, 2013

ஸுகரனை அடைய ஸூகரமான மூன்று உபாயங்கள்

ஸ்ரீ ப்ருத்யுவாச
அஹம் சிஷ்யாச தாஸீச பார்யாச த்வயீ மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம் லகூபாயம் வத ப்ரபோ 

தாயார், குழந்தைகள் எல்லோரும் கிணற்றில் விழுந்து விட்டார்கள். தந்தை வந்து தாயாரைக் காப்பாற்றி விட்டார். என்னைக் காப்பாற்றியது போல் குழந்தைகளையும் காப்பாற்றக் கூடாத என்று தாயார் கேட்பது போல் ஜகன்மாதாவான பூமாதா பகவானிடத்தில் நமக்காக ப்ரார்த்திக்கிறாள். ஸூகரமான மூர்த்தியான வராஹப் பெருமாள், ஸூகரமாகச் சொன்ன அதாவது எளிதில் செய்யகூடியதான மூன்று விஷயங்களை மூன்று முடிச்சாகப் போட்டு அதனை தனது குழந்தைகளுக்குப் போதிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அது தான்
பரமாத்மாவின் திருவடியிலே புஷ்பத்தை அர்ச்சிப்பது
பரமாத்மாவின் திருநாமத்தை உரக்கச் சொல்வது
பரமாத்மாவின் திருவடியிலே ஆத்ம சமர்பணம் செய்வது

பகவத் கீதையை அர்ஜுனன் மூலமாக உபதேசித்தும் மக்கள் பயன் பெறாததைக் கண்ணுற்ற பரமாத்மா, பூமாதேவியை கலியில் ஆண்டாளாக உத்தாரணம் செய்து,  திருப்பாவை மூலம், பரமாத்மா, நம்மை கிணறு போன்ற கலியின் பிடியிலிருந்து காப்பாற்ற கோதை மூலம், அர்ச்சனம், நாமம், ஆத்ம நிவேதனம் என்ற மூன்று உபாயத்தை திருப்பாவை மூலம் தெரியப்படுத்துவதை கேட்டு, தெரிந்து, அறிந்து பயன் அடைவோம்.


 - கருத்து முக்கூர் லக்ஷ்மீ நரஸிம்மாச்சாரியார்

No comments:

Post a Comment