உந்து
மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும்
குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும்
கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல்
பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி!
உன் மைத்துனன் பேர்பாட,
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
No comments:
Post a Comment