முப்பத்து
மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம்
தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம்
உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம்
கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன
மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை
நங்காய்! திருவே! துயிலெழாய்;
உக்கமும்
தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை
நீராட்டேலோ ரெம்பாவாய்.
No comments:
Post a Comment