மாயனை மன்னு வட
மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர்
யமுனைத் துறைவனை
ஆயர்
குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல்
விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து
நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில்
தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
தூமலர் தூவித்
தொழுது - இங்கு மலர் என்பது அடியவரின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக மலரும்
எட்டுவகை குணநலன்களை குறிப்பில் உணர்த்துகிறதாம்!
1. அகிம்சை,
2. புலனடக்கம், 3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம்,
4. சகிப்புத்தன்மை, பொறுமை, சமத்துவம், 5. ஞானம், 6. தியானம், 7. ஆன்மீக தவம், 8. சத்தியம்
எளிமையாகச்
சொல்லவேண்டுமானால், பரமனைப் பற்ற, பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் எல்லாம் அவசியமில்லை என்கிறாள் ஆண்டாள்! கடைபிடிக்க
வேண்டியதெல்லாம், அப்பரமனை மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனை
சிந்தித்த வண்ணமிருத்தலே! இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அருளவல்லது
என்பதே இப்பாசுரத்தின் சாரம்.
No comments:
Post a Comment