கீசு கீசு
என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின
பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும்
பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல்
ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த
தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப்
பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப்
பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்!
திறவேலோ ரெம்பாவாய்.
இந்தத் திருப்பாவை மூலம் பல முக்கிய செய்திகளை அறியலாம்.
இந்தத் திருப்பாவை மூலம் பல முக்கிய செய்திகளை அறியலாம்.
1. வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும்
அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ
முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை
உண்டு.
2.'காசும் பிறப்பும்' என்ற ஆபரணங்கள் இங்கே வேதங்களை (அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதியை)
குறிப்பில் உணர்த்துகின்றன
3. காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று
மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
4. ஆனைச்சாத்தன் என்பது பரமனைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம், அதாவது யானையைக் காத்தவன் என்றும் யானையை
அழித்தவன் என்றும்! பரந்தாமன் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காத்து
ரட்சித்தான்,
கம்சன்
அனுப்பிய குவலயாபீடம் என்ற யானையை கண்ணன் அழித்தான்.
5. தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே
உபாயம் என்று முழுமையாக உணர்ந்தவர்க்கே!) வாய்க்கும்! பூவுலகிலேயே தாஸ்ய ஞானம்
வாய்க்கப் பெற்றவரில் அனுமன், பீஷ்மர், கோபியர் ஆகியோர் அடங்குவர்.
6. இப்பாசுரத்தில் பலவகையான செவிக்கினிமையான ஓசைகள் சொல்லப்பட்டுள்ளன.
1. ஆனைச்சாத்தன்
குருவிகள் கூவும் ஓசை
2. ஆய்ச்சியரின்
அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவெனும் ஒலி
3. அவர்கள்
தயிர் கடையும் சப்தம்
4. நாராயண
சங்கீர்த்தனம்
(மின் வலையில்
இருந்து எடுத்துத் தொகுத்த்து) –
நன்றி பலாஜியின்
மின்வலைத் தளம்
காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
ReplyDeleteநிறைவான விளக்கங்கள் .. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..