Friday, December 28, 2012

அபலையின் மானம் காத்த மகாபெரியவா

திரு.நடராஜன் எனபவர் எங்களது குருநாதரின் முக்கிய சீடர்களில் ஒருவர். அவர் பல நல்ல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். மகா பெரியவாளுடன் சேர்ந்து இருந்த பல அனுபவங்களை பலர் எழுதுவதை தொகுத்து வெளியிடுவதை அவர் மின் அஞ்சல் மூலம் அனுப்பினதை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். இந்த பதிவிற்கு திருமதி வசந்தகுமாரி அவர்களின் உகபோகா மிகவும் பொருத்தமானது. அதனையும் உங்களுடன் சேர்ந்து கேட்டு மகிழ்கிறேன்.


கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.
எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !என்றார்.  யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள்.  பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்தாடா……….கொழந்தே! இங்க வா”  சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!
ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!
இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை.   அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி கோவிந்தாஎன்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார்.  அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

No comments:

Post a Comment