எனது ராகஸ்ரீ ப்ளாகில் தனுர் மாத தொடக்கத்தைக் குறித்து
திருப்பாவைப் பாடல்களை உங்களுடன் சேர்ந்து அனுபவிக்க முதல் பாடலை பதிவு செய்தேன்.
திரு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், திரு பால்காட் நாராயண ஸ்வாமி, திருமதி
எம்.எல்.வசந்தகுமாரி என்று சங்கீத உலக ஜாம்பவான்கள் பாடி கர்நாடக பூங்காவில்
எல்லோரும் அனுபவித்திருக்கும் தருணத்தில் என்னுடைய குழந்தைத் தனமான முயற்சியையும்
பாராட்டி எழுதிய அன்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்; வணக்கங்கள்.
ஒரு அன்பர் எனக்கு எழுதியுள்ள வாசகம்” மாணிக்கவாசகர் வாயில் கதவை தட்டமாட்டாரோ தலைவா? அவரின்
திருவெம்பாவையையும் சேர்த்து கேட்க ஆசைப்படுகிறோம் சிங்கன்ஜீ “. அந்த அன்பர் ஒரு
நடராஜன். தில்லை நடராஜன் கட்டளை என்று கொண்டு திருவெம்பாவையை பாட விழைகிறேன்.
திருப்பாவை, திருவெம்பாவை ப்ரபலமான வரலாறு எப்பொழுது,
எப்படி என்பதையும் அந்த அன்பர் எனக்கு ஒரு சுவையான செய்திமூலம் சொல்லியிருந்தார்.
அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"அந்த ஆச்சி என்ன பாடிக் கொண்டிருக்கா தெரியுமா?"
மஹா பெரியவாளின் கேள்வி; அது தெய்வத்தின் குரல்.
No comments:
Post a Comment